நல்லிணக்கத்திற்கான எங்கள் குரல்

(எஸ்.சதீஸ்)
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்கத்திற்கான எங்கள் குரல் எனும் கருப் பொருளில் இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான விவாத போட்டி சனிக்கிழமை (24) மட்டக்களப்பு வந்தாறுமூலை வேல்ட் விசன் மண்டபத்தி;ல் நடைபெற்றது
 
 
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் வெளிவிவகார அலுவலகத்தின் நிதி உதவியுடன் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு,இந்து சமய அலுவல்கள் அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தும் நல்லிணக்க பொறிமுறைகளை உறுதிப்படுத்தல் செயற்திட்டத்துடன் இணைந்து விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நடாத்தும் விவாத போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர்கழகங்கள் 08 அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் 6 சுற்றுக்கள் நடைபெற்றன.
 
 
விவாத அரங்கில் நடுவர்களாக ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ. ஹ{ஸைன், சட்டத்தரனி சரணியா ஜேயராஜா மற்றும் கல்வியியலாளர் சீனித்தம்பி லோகேஸ்வரி கடமையாற்றினர்.
 
 இவ்விவாத சுற்றின் இதன் தொடர்ச்சியாக இளைஞர்கழகங்களுக்கான விவாதப் போட்டிகள் இம்மாதம் இறுதியிலும் பாடசாலை மாணவர்களுக்கான விவாத போட்டிகள் செப்டொம்பர் மாதமும் நடாத்தப்படும்.
????????????????????????????????????
????????????????????????????????????

Related posts