(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2019/2020 ஆம் ஆண்டுக்கான பெரும்போகப் பயிர்ச்செய்கையானது 1,80,000 ஏக்கரில் செய்கை பண்ணப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பீ.இக்பால் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பெரும்போகப் பயிர்ச்செய்கை சம்பதமாக அவர் தெரிவிக்கையில் …
இதன்படி உன்னிச்சை,உறுகாமம்,கித்துள்வெவ,வெலிக்காகண்டி,நவகிரி,தும்பங்கேணி,கடுக்காமுனை,புழுகுணாவி,அடைச்சகல்,கட்டுமுறிவு,மதுரங்கேணி,கிரிமிச்சை,வாகனேரி,புனானை,தரவை,வடமுனை ஆகிய நீர்ப்பாசனத் திட்டத்தை பயன்படுத்தி பெரும்போகப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக விவசாய பயிர்ச்செய்கையில் நோய்த்தாக்கம்,பீடைத்தாக்கம்,உவர்த்தன்மையினால் விவசாயச் செய்கையில் விளைச்சல் வீழ்ச்சியடையாமல் விவசாயிகள் பயிர்ச்செய்கையை தொழிநுட்ப ரீதியாக மேற்கொள்ளுமாறு ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளதுடன்,ஏனைய மாவட்டத்திற்கு முன்னர் மட்டக்களப்பில் வேளாண்மை செய்கை ஆரம்பிக்கப்பட்டு உரமானியம் விநியோகிக்கப்படவுள்ளது.
பெரும்போக நெற்செய்கை ஆரம்பக்கூட்டத்தில் பெரும்போகப் பயிர்செய்கை ஆரம்பத் திகதி நிர்ணயித்தல்,விதைப்புவேலைகள்,விவசாயிகளின் நாட்சம்பளம் நிர்ணயித்தல்,உரமானியம் விநியோகம்,கால்நடைகளை மேச்சல்தரைக்கு அப்புறப்படுத்தல்,அறுவடைக்காலம் நிர்ணயித்தல்,தண்ணீர் பிரச்சனை,யானைப்பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதென அவர் இவ்வாறு தெரிவித்தார்.