(துதி)
கடந்த ஏப்ரல் 21ம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத்தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரியின் உடற்பாகங்களைப் புதைப்பதற்குரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் அவ் உடற்பாகங்களை ஏறாவூர்ப் பற்றுப் பிரதேசசபையின்ஆளுகைக்குட்பட்ட எந்தவொரு இடத்திலும் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என்னும் தீர்மானம் இன்றைய தினம் ஏறாவூர்பற்றுப் பிரதேச சபை அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஏறாவூர்ப்ற்றுப் பிரதேச களுவங்கேணி வட்டார தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வேல் பரமதேவா அவர்களினால் கொண்டு வரப்பட்ட பிரேரணையே இவ்வாறுநிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரணையின் போது அவர் குறிப்பிட்டதாவது,
கடந்த 21.04.2019 அன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் உடற்பாகங்களை ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட எந்தவொரு இடுகாடுகளிலும் எக்காரணம் கொண்டும் அடக்கம் செய்வது தடைசெய்யப்படல் வேண்டும். அவ்வாறு தடைசெய்யும் பட்சத்திலேயே இப்பிரதேச மக்களிடையே ஏற்படும் இனமுறுகலைத் தடுக்க முடியும்.
கடந்த மாதம் மட்டக்களப்பு கள்ளியங்காடு பிரதேசத்தில் இவ்உடற்பாகங்கள் புதைக்கப்பட்டதன் விளைவு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.அவ்வாறானதொரு நிலை எமது பிரதேசத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே சட்டங்கள் என்றும்கட்டளைகள் என்றும் இவ் உடற்பாகங்களை எமது பிரதேச இடுகாடுகளில் அல்லது வேறு இடங்களில் புதைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதன் காரணமாக முன்கூட்டியே எமது சபையினால் இதற்குஎதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தீர்மானம் நிறைவேற்றப்படல் வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கமைய இத்தீர்மானம் சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.