தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இந்த வைரஸினால் சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதுடன், கடந்த மாதத்தில் மாத்திரம் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.
காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட பலர் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் இருந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர்.
பிறந்து 6 மாதங்களேயான குழந்தைகளும் காய்ச்சலினால் பீடிக்கப்படுவதாக நோயாளர்கள் குறிப்பிட்டனர்.
கடுமையான காய்ச்சல், இருமல், மூச்செடுப்பதில் சிரமம் ஆகியன இந்த வைரஸ் நோய்க்கான அறிகுறி என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு குறிப்பிட்டது.