கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா (22) மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமானது.மட்டக்களப்பு புனித செபஸ்தியர் தேவாலயம் மற்றும் தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்தில் இருந்தும் ஆரம்பமான கலாச்சாரப்பவனி தேவாநாயகம் மண்டபத்தை வந்தடைந்ததனைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய விழா கோலாகலமாக ஆரம்பமானது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவினங்களின் பாரம்பரிய கலை,கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆரம்பமாகிய முதல் நாள் நிகழ்வானது பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்,மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள்,திணைத்தளைவகள்,
இன்றையதினம் ஆரம்பமான மாகாண தமிழ் இலக்கிய விழாவானது தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் மட்டக்களப்பு அரசடி தேவாநாயகம் மண்டபத்தில் நடைபெறுகின்றது.
இன்றைய விழாவில் இலக்கிய ஆய்வரங்கு நடைபெறவுள்ளதுடன் இந்த ஆய்வரங்கில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கலை இலக்கியத்துடன் தொடர்புடைய பேராளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
மூன்று தினங்களும் காலை நிகழ்வாக ஆய்வரங்குகள் நடைபெறவுள்ளதுடன் பிற்பகல் நான்கு மணி தொடக்கம் ஏழு மணி வரையில் கலை,கலாசார நிகழ்வுகள் நடைபெற்றது.