கே.கிலசன்
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவின் நாவிதன்வெளி 01 கிராம சேவகர் பிரிவிலுள்ள நாவிதன்வெளி 7ம் கிராமம் வீ.சீ கிராமம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இயங்கிவரும் அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்துக்கு தேர்வான மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் செயலாளர் தெ.தேவமலர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்துமத மதகுருமார்களான சிவஸ்ரீ சிவபரன் குருக்கள் சிவஸ்ரீ கு.சுபாஸ்கர சர்மா ஆலயத் தலைவர் கு.ஜெயக்குமார் உபதலைவர் கு.விக்னேஸ்வரன் பொருளாளர் க.ரவிச்சந்திரன் ஊடகவியலாளர் செ.துஜியந்தன் ஆசிரியர்களான திருமதி.சுவானந்தி ரூபன் திருமதி.மேகலா அருள்நாயகம் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய ச.மிதுசாயி க.துஷாந் கு.சஜீவன் க.விஜய் கி.கிந்து ந.தர்சினி மற்றும் கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற தே.அசோபிகா ஆகியோரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியமானது சமூகத்தின் கல்வி கலை கலாச்சாரம் போன்ற விடயங்களை மேம்படுத்தும் நோக்கில் இலவச பிரத்தியேக வகுப்புக்களையும் பொது வேலைகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.