(காரைதீவு குறூப் நிருபர் சகா)
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை ஏற்பாடுசெய்த மாபெரும் சிறுவர்தினவிழா இன்று(1) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஊர்வலத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இப்பெருவிழாவில் கிழக்கு மாகாண கல்விகலாசார விளையாட்டுத்துறை தகவல்தொழினுட்ப முன்பள்ளி இளைஞர்விவகார புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துபண்டா பிரதம அதிதியாகக்கலந்து சிறப்பித்தார்.
முன்னதாக வலயக்கல்விப்பணிமனை முன்றலிலிருந்து மாணவர்களின் விழிப்புணர்ச்சி ஊர்வலம் பலவித சுலோகங்களடங்கிய பதாதைகளுடன் இடம்பெற்றது.
;நிறைவில் அதிதிகள் மாலைசூட்டி வரவேற்கப்பட்டு அல்மர்ஜான் மகளிர் கல்லூரிமண்டபத்தில் விழா நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் கடந்தகாலங்களில் சம்மாந்துறை வலயத்தில் கல்விச்சேவையாற்றி ஓய்வுபெற்றவர்களில் சேவைமூப்பு அடிப்படையில் ஒவ்வொருபிரிவிலும் ஒருவராக ஏழு கல்விப்பணியாளர்கள் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனர்.
வலயத்தில் ஏலவே கடமையாற்றிஓய்வுபெற்ற வலயக்கல்விப்பணிப்பாளர் ஜ.எம்.இஸ்ஸதீன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எ.எல்.எம்.அமீன் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.எல்.எ.மஜீட் உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.செல்லத்துரை ஆசிரியஆலோசகர் எ.ம்.மஹ்றூப் அதிபர் இ.தங்கராசா ஆசிரியர் எம்.பி.இஸ்மாலெவ்வை ஆகியோர் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுசின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் தேசிய மாகாணமட்டங்களில் சாதனை புரிந்த 36மாணவர்கள் நினைவுச்சின்னங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டிக்கௌரவிக்கப்பட்டன நி கழ்சி நெறியாள்கை மற்றும் தொகுப்பினை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா மேற்கொண்டார்.உதவியாக இணைப்பாளர் நிசார் செயற்பட்டார்.
மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மும்மொழியிலும்இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றியுரையினைஉதவிக்கல்விப்பணி ப்பாளர் எ.எல்.மஜீட் ஆற்றினார்.