கல்முனை ஆதாரவைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு கல்முனை பொது அமைப்புக்கள் ஆதரவு !  

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு கல்முனை பொது அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.கடந்த இருநாட்களாக நிலவிய அசாதாரநிலை  வெள்ளிக்கிழமை முதல் முற்றாக நீங்கியுள்ளது. தற்போது வழமைபோல வைத்தியசாலை இயங்கிவருகின்றது.
 
கடந்த 16ஆம் திகதி  மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணத்தை தழுவிய பாண்டிருப்பு பெண் ஒருவரின் சார்பில் வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு அபகீர்த்தியை உண்டு பண்ணும் வகையில் மேற்கொண்ட அசம்பாவிதமானது எந்த ஒரு பாண்டிருப்புகல்முனை பொது அமைப்புக்களாலும் ஒழுங்கு செய்யப்படவில்லை என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
 
அத்துடன்  நடந்த கசப்பான சம்பவங்களுக்கு மனம் வருந்துவதாகவும் கூறி கடந்த 17இல்  பௌத்த மதகுரு (சாது) உட்பட ஆலய நிர்வாகிகள் பொது அமைப்புக்கள் பிரமுகர்கள் மகளிர் சங்க தலைவி மாதர் சங்க தலைவி இளைஞர் சேனை உட்பட பெரும் திரளான மக்கள் ஒன்று கூடி நிர்வாகத்திற்கும் மனம் வருந்தியுள்ள உத்தியோகஸ்தர்கள் வைத்தியர்கள் நிபுணர்கள் அனைவருக்கும் ஆறுதலும் மனம் தளராது கடைமையாற்ற உத்வேகமுமளித்து பலர் உரையாற்றினார்கள்.
 
 
அமைப்புக்களின் ஏகோபித்த முடிவாக இறந்த தாய்க்கு அஞ்சலியும் அதேவேளை அந்த நொந்துபோயுள்ள குடும்பத்தை பயன்படுத்தி திட்டமிட்டு  ஏற்படுத்தபட்ட தேவையற்ற அசம்பாவிதங்களுக்கு தாங்கள் மனவேதனையை தெரிவித்து சிலர் இப்பிரச்சினையை வேண்டுமென்று விளக்கமின்றி பெரிதுபடுத்தியுள்ளதாகவும் அவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் ‘ தெரிவித்தனர்.
 
மேலும் சிசிரிவி  கமராக்கள் மூலம் பதிவாகியுள்ள குழப்பக்காரர்கள் சிலர் தங்களுக்கு என்ன பிரச்சனை என்பதே தெரியாது என்கின்றனர்.
 
வைத்தியசாலை  வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரனிடம்  இறந்த பெண்மணியின் மைத்துனர் நேற்று(18) சந்தித்து  நடந்த சம்பவம் மனக்கவலையுடன் இருந்த தங்கள் குடும்பத்தை பயன்படுத்தி நெருக்குதல் மூளைச்சலவை மூலம் ஏற்படுத்தபட்டது எனவும்  தான் சுயநினைவுடன் இவ்வாறு நடக்கவில்லை என மன வேதனை அடைந்ததுடன் நடந்த சம்பவங்களுக்காக இருகரம் கூப்பி மன்னிப்பும் கோரினார். 
இச்சம்பவத்தை நேரடியாக பார்க்கையில் உருக்கமாகவும் மிக வேதனையாகவும் இருந்தது.
 
 இவரின் மன்றாண்டமான கோரிக்கையான மரணப்பரிசோதனை இங்கு நடைபெற வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திய அத்தியட்சகர் ஏற்று அம்பாரை பொது வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகர் அவர்களின் மனமுவந்த உதவியின் மூலம் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் மரணப்பரிசோதனையை அம்பாரை மரணப்பரிசோதனை வைத்திய நிபுணர் அவர்களினால் நிறைவு செய்து பிரேதம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
 
அம்பாரை பொது வைத்தியசாலை யின் வைத்திய அத்தியட்சகர் சம்பவத்தை அறிந்து மேலதிக உதவிகள் வழங்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
இதேவேளை  களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் சிறந்த மகப்பேற்று நிபுணரின் சிகிச்சையை பாராட்டி தனது கருத்தை ஊடகம் மூலம் தெரிவித்துள்ளார். 
 
நிபுணர்சம்பந்தப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அன்பாக பேசினார். கல்முனை ஆதாரவைத்தியசாலையில்  பல வைத்திய நிபுணர்கள் இச்சந்திப்பில் கலந்து விளக்களித்தனர்.
 
மேலும் மகப்பேற்று நிபுணர் இன்னும் சில வைத்தியசாலைகளுக்கு தனது செலவில் சென்று சேவையாற்ற சம்மதித்திருந்ததும் இவர் உகந்தை குமுக்கன் போன்ற ஆலயங்களுக்கு உற்சவ காலங்களில் சென்று இலவச சிகிச்சையை வழங்கும் சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
தற்போது (18ஆம் திகதி  காலை) வைத்தியசாலையின் சகல சேவைகளும்  வழமைக்கு திரும்பியுள்ளது.

Related posts