முள்ளை முள்ளால் எடுக்கும் நிலைதான் கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் தமிழர்கள் முடிவாக இருந்தது, பா.அரியநேத்திரன்,மு.பா.உ

சரத்பொன்சேகாவும் மகிந்தராசபக்சவும் போட்டியிட்ட 2010,ஜனாதிபதி தேர்தலில் இந்த இரண்டு இனப்படுகொலையாளர்களையும் விட எதிரும் புதிருமாக வேறு ஒரு வேட்பாளர் பொது வேட்பாளராக இல்லாத காரணத்தால்தான் வேறு தெரிவு இன்றி சரத்பொன்சேகாவை தமிழர்கள் ஆதரித்தனர் முள்ளை முள்ளால் எடுக்கும் நிலையே அன்றய நிலை எனக்கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன்.

அம்பிளாந்துறையில் அவரின் அலுவலகத்தில்  05/10/2019 சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தற்போதய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மேலும் கூறுகையில்

சரத்பொன்சேகாவை ஆதரித்த தமிழர்கள் கோத்தபாயாவை ஏன் ஆதரிக்க முடியாது என கேட்கும் தமிழர்களுகளுக்கு உண்மையில் பதில்கொடுக்கவேண்டியது எமது கடமை அதை கூறுகிறேன் கவனமாக கேழுங்கள்.

முள்ளிவாய்க்கால் போர் இடம்பெற்று விடுதலைப்புலிகள் மௌனித்தது 2009,மே,18 இந்த முள்ளிவாய்க்கால் போருக்கான காரண கர்த்தாவாக இருந்தவர் அப்போதய ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அவரின் கட்டளையில் களத்தில் போரை வழிநடத்தியவர் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இது பாலர் வகுப்பு மாணவர் தொடக்கம் பல்கலைகழக உபவேந்தர்கள் வரையும் தெரிந்தவிடயம் வடக்குகிழக்கு தமிழ்மக்கள் புலம்பெயர் தமிழர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த விடயம் அந்த போராட்டத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்து நேரடி கண்காணிப்பில் முள்ளிவாய்க்கால் இறுதி போரை வழிப்படுத்தியவரும் மகிந்தவின் சகோதரர் கோ த்தபாய ராஜபக்ச என்பதும் அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம் மொத்தத்தில் தமிழின படுகொலைகளில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் முக்கிய சூத்திரதாரிகள் இந்த மூன்றுபேரும் இவர்களின் நேரடி கண்காணிப்பு வழிநடத்தலில் தான் இராணுவ தளபதிகள் பலர் தமிழ் ஒட்டுக்குழுக்கள் பன்னாட்டு படைகள் சர்வதேச உதவிகளுடன் முள்ளிவாய்க்கால் போர் மௌனித்தது.

இந்த மௌனம் நடந்து சரியாக எட்டுமாதம் கடந்த நிலையில் இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி தேர்தல் 2010.ஜனவரி.26,ம் திகதி இடம்பெற்றது,
முள்ளிவாய்க்காலில் இருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான எம் உறவுகள் வவுனியா மன்னார் கிளிநொச்சி என பல இடங்களில் முள்ளிவேலிக்குள் அகதிகளாக அடைக்கப்பட்டிருந்த வேளையில் இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.

அப்போது 22,தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நான் உட்பட இருந்த காலம் அப்போது ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிட்டாலும் சிவாஜிலிங்கம் உட்பட அதில் நேரடி போட்டியாக இருந்த இருவர் ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர் வெற்றிலை சின்னத்தில் ஜனாதிபதியாக ஏற்கனவே இருந்து முள்ளிவாய்க்கால் அவலத்துக்கான ஆணை பிரப்பித்த மகிந்த ராஷபக்ச மற்றவர் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக கட்சியில் அன்னம் சின்னத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தளபதி சரத் பொன்சேகா இந்த இருவரில் ஒருவர்தான் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பு இருந்தது.

இரண்டுநபருமே இனப்படுகொலை சூத்திரராதிகள் இவர்களில் யாரை தோற்கடித்தால் ஓரளவு எமது மக்களுக்கு நிம்மதி கிடைக்கும் முள்ளு வேலிக்குள் இருக்கும் எமது மக்களை மீள் குடியேற்றம் செய்யலாம் ஓரளவாவது தற்காலிக நிம்மதிக்காக என்ன செய்யலாம் என்பதை அப்போதிருந்த 22,தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அப்போது கஜேந்திரகுமார்,செ.கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன்,சுரேஷ்பிரமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன்,ஶ்ரீகாந்தா,சிவாஜிலிங்கம், சிவசக்திஆனந்தன்,வினோநோக கராசலிங்கம், சம்மந்தன்ஜயா,மாவைசேனாதிராசா,சந்திரகாந்தன்,கனகசபை,தங்கேஷ்வரி,ஜெயானந்தமூர்த்தி,அரியநேத்திரன்(நான்) துரைரெட்ணசிங்கம்,சிறீல்,கிசோர்,கனகரெட்ணம்,ஜனாப் இமாம், தோமஷ் ஆகிய 22,உறுப்பினர்களும் கொழும்பில் பலமுறை கூடி ஆராய்ந்தோம் இறுதியாக இரண்டு வேட்பாளர்களிடமும் வடகிழக்கு தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களை தீர்பதற்கு எழுத்து மூலமான உறுதி மொழியை கேட்டிருந்தோம் அதற்கு வேட்பாளர் சரத் பொன்சேகா இணங்கி நாம்கேட்ட விடயங்களுக்கு எழுத்து மூலமான உறுதியினை தந்தார் ஆனால் எழுத்துமூலமான ஆவனம் தாம் தந்ததாக ஊடகங்களிலோ அல்லது யாராவது கூறினால் அது தமது வெற்றிக்கு வாய்ப்பில்லாமல் போகும் என்பதால் வெளியில் கூற வேண்டாம் என சம்மந்தப்பட்ட சரத்பொன்சேகா உட்பட அவரின் பிரதிநிதிகளும் சம்மந்தன் ஐயா விடம் தெரிவித்தமையை ஏற்று எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் 22,பேரும் அந்த ஆவன பேப்பரை கண்ணால் பார்த்து நாம் உறுதிசெய்திருந்தோம்.சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்தோம்.

ஆனால் இந்த கூட்டத்தில் சமூகமாய் இருந்த சிவாஜிலிங்கம்,ஶ்ரீகாந்தா இருவரும் மறுநாள் கட்சி எடுத்த முடிவுக்கு மாறாக தாம் சிவாஜிலிங்கத்தை வேட்பாளராக தேர்தல் திணைக்களத்தில் சென்று கட்டுப்படணத்தை செலுத்தினர் சிவாஜிலிங்கத்தை போட்டியிட வேண்டாம் என அனைவரும் கூறியபோதும் தாம் விடாப்பிடியாக நின்று அந்த தேர்தலில் போட்டியிட்டார் படுதோல்வி கண்டார் என்பது உண்மை.

இதில் ஜனாதிபதி மகிந்தவை தோற்கடிக்க வேண்டுமென்ற மனோநிலை எல்லா தமிழ் மக்கள் மனதிலும் ஊறி இருந்தது இந்த நிலையில்தான் மகிந்தவை தோற்கடிக்க சரத்பொன்சேகா கருவியாக பயன்படுத்தி வடக்கு கிழக்கு மக்கள் அன்னம் சின்னத்துக்கு வாக்களித்தனர் அதற்காக சரத்பொன்சேகா யோக்கியவான் என்று ஆதரிக்கவில்லை அன்றய தேர்தலில் சரத்பொன்சேகாவை விட வேறு ஒருவர் மாற்றீடாக எந்த வேட்பாளரும் இல்லாத காரணத்தால் அன்றய தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது இதை புரியாமல் தற்போதய தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரித்த தமிழர் கோத்தபாயாவை ஏன் ஆதரிக்க கூடாது என கேட்கிறார்கள் உண்மையில் அன்றய 2010,தேர்தலில் போட்டியிட்ட இருவருமே இனப்படுகொலைக்கு துணைபோனவர்களாக இருந்தார்கள் அவர்கள் இருவரையும் தவிர்த்து அன்றய தேர்தலில் வேறு பொருத்தமான ஒருவரை வேட்பாளராக நியமிக்காமையாலேயே அன்றய தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரித்தது என்பது உண்மை இதில் கிழக்குமகாணத்தை விடவும் கூடிய வாக்குகள் வடமாகாணத்தில் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்தனர் அதன் காரணம் மகிந்த என்ற கொடுங்கோல் ஆட்சியை தோற்கடிப்பதற்கே அன்றி வேறில்லை.

அதுபோலவே 2015,ஜனாதிபதி தேர்தலிலும் முள்ளை முள்ளால் எடுக்கும் முறையே மகிந்த என்ற முள்ளை மைத்திரி என்ற முள்ளால் எடுக்கும் நிலையில் மைத்திரியை கருவியாக பயன்படுத்தினோம் இதுதான் உண்மை இதுவும் மைத்திரி மீது கொண்ட காதலுக்காகவோ விருப்புக்காகவோ அல்ல மகிந்த என்ற பெரிய முள்ளை அகற்ற மைத்திரி என்ற சிறிய முள்ளு கருவியாக பாவிக்கப்பட்டது அதற்காக தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு முழுவதும் பூரண ஆதரவு நல்கினோம்.

தற்போதய தேர்தலில் கோத்தபாயவுக்கு எதிராக போட்டியிடுவர் சஜீத் பிறேமதாச அவர் திறமையானவர் இனவாதி இல்லை என நான் கூறமாட்டேன் இதில் கோத்தபாயாவுடன் ஒப்பிடும் போது சஜீத் பறவாய் இல்லை அவ்வளவுதான் அதற்காக அவரை ஆதரிக்க வேண்டும் என நான் கூறவில்லை யாரை ஆதரிக்க கூடாது என இந்த இருவரில் பட்டியல் இட்டு புள்ளி இடுவோமானால் யார் கூடுதலான அழிவுகளை தமிழருக்கு தந்தார் யார் குறைந்த அழிவுகளை தந்தார் என்பதை பொறுத்து முடிவு எடுக்கலாம்.

தமிழ்தேசியகூட்டமைப்பு மிகவும் கவனமாக பரீசீலனை செய்து இந்த தேர்தல் தொடர்பாக இறுதி முடிவை சம்மந்தன் ஐயா அறிவிப்பார். அதுவே தமிழ்தேசிய கூட்டமைப்பின் இறுதி முடிவும் உத்தியோகபூர்வமான முடிவாகவும் இருக்கும்.வேண்டாவெறுப்பாக 2010, தேர்தலுடன் எதிர்வரும் தேர்தலை ஒப்பீடு செய்வதும் சரத்பொன்சேகா கோத்தபாயா,மகிந்தவடன் வேறு வேட்பாளர்களை ஒப்பீடு செய்வதும் பொருத்தமானதாக நான் பார்கவில்லை எனவும் மேலும் கூறினார்.    

 

Related posts