(சா.நடனசபேசன்)
நவராத்திரி விழாவினை முன்னிட்டு வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பு மற்றும் வெற்றிரெப் நியூஸ் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்களது நிதியின் மூலம் பரிசுப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 7 ஆம்திகதி நடைபெற்றது
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் நாவராத்திரி விழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டி நிகழ்வுகள் அதிபர் எஸ்.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் வசிக்கும் சமூகசேவகர் துரைநாயகம் அவர்களிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இப் பரிசுப்பொருட்களுக்கான உதவியினை வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், உபசெயலாளரும் மகளீர் அமைப்பின் தலைவியுமான திருமதி செல்வி மனோகர் பிரதி அதிபர் க.பேரானந்தம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்
இவ் உதவியினை வழங்கிய சமூகசேவகர் துரைநாயகம் மற்றும் சுவிஸ் உதயம் அமைப்பு,வெற்றிரெப் இணையத்தளத்திற்கும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்;.