மகிந்த ஆட்சிக்காலத்திலேதான் ஒரு இனத்தினை இன்னுமொரு இனம் சந்தேகம் கொண்டு பார்க்கு நிலை இல்லாமல் செய்யப்பட்டதாக ரீ.எம்.பி.பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவிப்பு.

(க. விஜயரெத்தினம்)
மகிந்த ஆட்சிக்காலத்திலேதான் ஒரு இனத்தினை இன்னுமொரு இனம் சந்தேகம் கொண்டு பார்க்கு நிலை இல்லாமல் செய்யப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
 

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அலுவலகங்கள் திங்கட்கிழமை  திறந்துவைக்கும் பணியகம்  ஆரம்பித்துவைக்கப்பட்டன.

பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிக்கான தலைமை தேர்தல் பிரசார அலுவலகம் திங்கட்கிழமை(14) மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் திறந்துவைக்கப்பட்டது.

மாநகரசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் கலந்துகொண்டார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவிற்கான அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரசாந்தன்,

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் கிழக்கில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.கிழக்கு மாகாணத்தில் ஒரு இனம் இன்னுமொரு இனத்தினை சந்தேக கண்கொண்டு பார்க்கமுடியாத நிலையினை உருவாக்கியிருக்கின்றோம்.

மஹிந்த ராஜபக்ஸவுடன் எவ்வாறு இணக்க அரசியல் செய்யலாம் என்ற அனைத்து வழிகளையும் அறிந்தவர்கள் நாங்கள்.கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் இந்த நாட்டில் அரசாங்கம் அமையுமானால் கிழக்கில் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்போம் என்ற உத்தரவாத்தினை நாங்கள் தருகின்றோம்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களியுங்கள் நாங்கள் அனைத்தையும் பெற்றுத்தருகின்றோம் என கோரிய தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

Related posts