ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு சட்டம்,நீதி எவ்வாறு நிலை நாட்டப்பட வேண்டும் என்பது தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கான பயிற்சி கருத்தரங்கு இன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீறிகாந் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேர்தல் சட்டங்களையும் நீதியினையும் பற்றிய விரிவுரையினை ஓய்வு நிலை பிரதி ஆணையாளர் எம்.எம்.முகமட் தெளிவுபடுத்தினார்.இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சனி முகுந்தன்,மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சசீலன்,மாவட்ட செயலகத்தின் கணக்காளர் பிறேமகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி;களும் கலந்து கொண்டு தேர்தல் கால நீதி,சட்டம் ,தொடர்பான விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.
தபால் மூல வாக்கெடுப்பு ஒக்டோபர் 31 ஆந் திகதியும்,செப்டெம்பர் 01 ஆந் திகதியும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படை தேர்தல் சட்டங்களை பின்பற்றி நடத்தப்படும் என ஓய்வு நிலை பிரதி ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் 27 வாக்கெண்ணும் நிலையங்களும்,7 தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது.தேர்தல் கணக்கெடுக்கும் நிலையமாக வழமையாகபாவிக்கும் இந்துக்கல்லுரி தான் இம்முறையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப் பு,ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளுக்குமாக மொத்தம் 398301 வாக்காளர்கள் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்கவுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சசிலன் தெரிவித்தார்.