இலங்கையின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பான 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தின் 56 ஆவது சரத்தின் கீழ் கோட்டாய ராஜபக்ஷ இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்தற்காக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நூற்றுக்கு 52.25 சதவீத வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதா 41.99 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.