• 22தேர்தல் மாவட்டங்களில் 17கோட்டா வசம். 5சஜித் வசம்!
• யாழ்.மாவட்டத்தில் 312722வாக்குகளால் சஜித் முன்னணியில்…
• கோத்தாவின் வெற்றியைத்தீர்மானித்த வாக்குகளான 14லட்சம் வாக்குகள் சிங்களவாக்குகள்.
• சஜித் பெற்ற வாக்குகளில் மாவட்டரீதியில் யாழ்.மாவட்டம் 83.86 வீதம்
• கோட்டா பெற்ற வாக்குகளில் மாவட்டரீதியில் யாழ் மாவட்டம் 6.24 வீதம் குறைந்தவையாகும்.
நடந்துமுடிந்த நாட்டின் 8வது ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் பல செய்திகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளது.
16.11.2019இல்இடம்பெற்ற 8ஆவது ஜனாதிபதித்தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச 52.25வீத வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 41.99வீத வாக்குகளைப்பெறற் புதிய ஜனநாயகமுன்னணி வேட்பாளர் சஜித்பிரேமதாச தோல்வியைத்தழுவியுள்ளார்.
இம்முறை 50வீத வாக்குகளை யாரும் பெறமாட்டார்கள்.எனவே 2ம்3ம் விருப்பு வாக்குகள் எண்ணவேண்டிவரும் என்றெல்லாம் கூறப்பட்டன. அதனைப்பொய்யாக்கி 52.25வீத வாக்குகளைப்பெறமுடிந்ததற்கு பல்வேறு வகையான யுக்திகள் பயன்பட்டன எனலாம்.
கோட்டபாய வெற்றியடைந்ததற்கு சிறுபான்மையினரின் வாக்குகள் காரணமோ என்னவோ மொத்தத்தில் சிறுபான்மைதான் காரணம் என்பதை மறுக்கமுடியாது. சஜித்தோடு அணிசேர்ந்த முஸ்லிம் தமிழ் பிரதான கட்சிகளின் கூட்டுத்தான் கோட்டாவின் வெற்றியை இலகுவாக்கின என்று அரசியல் நோக்கர்கள் கோடிட்டுக்காட்டுகிறார்கள்.
கடந்த ஏழு முறை இடம்பெற்ற ஜனாதிபதிதேர்தல்களின்போது பெறப்பட்ட வாக்குவீதத்தைப்பற்றி சிறுகண்ணோட்டம் செலுத்துவோம்.
20.10.1982இல் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித்தேர்தலில் 52.91வீத வாக்குகளைப்பெற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
19.12.1988இல் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித்தேர்தலில் 50.43வீத வாக்குகளைப்பெற்ற ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
09.11.1994இல் நடைபெற்ற மூன்றாவது ஜனாதிபதித்தேர்தலில் 62.28வீத வாக்குகளைப்பெற்ற சந்திரிகா குமாரணதுங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
21.12.1999இல் நடைபெற்ற நான்காவது ஜனாதிபதித்தேர்தலில் 51.12வீத வாக்குகளைப்பெற்ற சந்திரிகா குமாரணதுங்க மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
17.11.2005இல் நடைபெற்ற ஜந்தாவது ஜனாதிபதித்தேர்தலில் 50.29வீத வாக்குகளைப்பெற்ற மஹிந்தராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
26.01.2010இல் நடைபெற்ற ஆறாவது ஜனாதிபதித்தேர்தலில் 57.88வீத வாக்குகளைப்பெற்ற மஹிந்தராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
08.01.2015இல் நடைபெற்ற ஏழாவது ஜனாதிபதித்தேர்தலில் 51.28வீத வாக்குகளைப்பெற்ற மைத்திரிபாலசிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
நாட்டின் இனமத பேதங்கள் வேண்டாம் நீதியான சுதந்திரமான நல்லாட்சி வேண்டும் சிறுபான்மையினரை ஒதுக்கக்கூடாது உண்மையான ஜனநாயகம் வேண்டும் போன்றபல செய்திகளை உரத்துச்சொல்லியுள்ளது என்பதற்கப்பால் நாம் பெரும்பான்மை சிங்கள்மக்கள் நினைத்தால் சிறுபான்மையின வாக்குகள் இல்லாமலே ஜனாதிபதியை உருவாக்கமுடியுமென்ற உண்மையை எடுத்துக்காட்டியுள்ளது.
நிற்க இத்தேர்;தலில் தமிழர்கள் குறிப்பாக சிறுபான்மைச்சமுகம் வாழும் வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் மேலும்பல செய்திகளைச் சொல்லியுள்ளது. இம்முறை தமிழ்மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தமையே இச்செய்திக்குக்காரணமாகும். 80வீதத்திற்கு மேலாக வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
2005இல் மஹிந்த வெல்லவும் 2015இல் மஹிந்த தோற்கவும் காரணம் வடக்குகிழக்கு மாகாணமே அதிலும் தமிழ்மக்களே எனலாம். ஆம் 2005 இல் ரணிலுக்கு வாக்களிக்கவேண்டாமென விடுதலைப்புலிகள் கூறியமையினால் மஹிந்த வென்றார். 2015இல் மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்று தமிழ்த்தரப்பு கூறியமையினால் மஹிந்த தோற்றார்.
ஆனால் அந்தச்சமன்பாடு இம்முறை பொய்த்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
நாம் தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி நாம் தான் ஜனாதிபதியைக்கொண்டுவந்தோம் என்ற மமதையுடனான கோசம் இனிமேல் எழுப்ப சந்தர்ப்பமில்லை.அந்த கோசமே அவர்களை இவ்வாறான ஒரு முடிவுக்குக்கொண்டுவரகாரணம் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
குறிப்பாக சஹ்ரான் தாக்குதலுக்குபிற்பாடு முஸ்லிம்கள்மீதுள்ள எதிர்ப்பலைகள் பெரும்பான்மையின மக்கள் மத்தியிலே நிறையவே இருந்தன. அதனை சஜித் தேசியத்தலைவர் என்று கருதி அதனை கவனியாமல் விட்டிருக்கலாம்.
ஆனால் இன்றைய முடிவுக்கு அதுவும் ஒரு காரணமென்பதை நாம் மறுக்கமுடியாது.
அடுத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடும் அடுத்தகாரணம். ஒருவாறு பல்கலை மாணவர்களின் முயற்சியினால் ஒருவாறு கூட்டுச்சேர்ந்த அவர்கள் தட்டுத்தடுமாறி முடிவுகளை தனித்தனியாக அறிவித்ததும் 13என்ற அதிஸ்டமற்ற இலக்கத்தில் கோரிக்கையை முன்வைத்து மண்கவ்விய சந்தர்பங்களும் முழு தமிழ்ச்சமுகத்தையே தலைகுனியவைத்துள்ளது.
மேலும்த.தே.கூட்டமைப்பின் அண்மைக்கால போக்குகள் தமிழ்மக்கள் மத்தியில் சொல்லுமளவிற்கு வரவேற்பைப்பெற்றிருக்கவில்லையெ ன்பதை அவதானிக்கவேண்டும். அவர்கள் அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டமை பிரதேசவாதம் தலைதூக்கியிருந்தமை கட்சிகளிடையே ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு காரணிகள் பலவீனத்திற்கு காரணமென்பதை நோக்கர்கள் சுட்டவும் தவறவில்லை.
த.தே.கூட்டமைப்பு மீண்டுமொருமுறை தன்னை இதயசுத்தியுடன் மீள சுயபரிசீலனை செய்துகொள்ளவேண்டும் இல்லாவிடில் அடுத்த தேர்தலில் மிகவும் பலவீனமான நிலையயையடைக்கூடுமெனகருதப்படுகி றது.
இம்முறை வடக்கு கிழக்கு தமிழர்கள் கூடுதலாக சஜித்திற்கு வாக்களித்துள்ளார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது. அதற்காக த.தே.கூட்டமைப்புக் கூறித்தான் இவர்கள் அதனைச்செய்தார்களா? என்பதில் ஜயமுள்ளதென ஒரு நோக்கர் கூறுகிறார்.
சரி இனி வட-கிழக்கு தேர்தல் முடிவுகளை சற்று ஆய்வு செய்வோம்.
வடக்கில் யாழ்ப்பாணம் வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்டங்களும் 14தேர்தல் தொகுதிகளும் கிழக்கில் திருமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களும் 10 தேர்தல் தொகுதிகளும் உள்ளன.
இத்தேர்தலில் 05 மாவட்டங்களையும் சேர்ந்த 22 தேர்தல் தொகுதிகளிலும் உயிர்ப்பான வாக்களிப்பு இடம்பெற்றன. இப்பகுதிகளில் வாழும் சிறுபான்மைச்சமுகங்களான தமிழ் முஸ்லிம் மக்கள் கூடிய வீதத்தில் சுதந்திரமாக வாக்களித்தனர்.
இதன்படி வடக்கில் சகல தேர்தல் தொகுதிகளிலும் புதிய ஜனநனநாயகமுன்னணி வேட்பாளர் சஜித்பிரேமதாச வெற்றிபெற்றுள்ளார். யாழ்மாவட்டத்தில் மட்டும் அவர் 312722வாக்ககளைப்பெற்றுச்சானை படைத்துள்ளார். அங்கு கோட்டபாயவிற்கு ஆக 23261வாக்குகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றன.
மன்னர் வவுனியா முல்லைத்தீவு ஆகிய நிருவாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 174739வாக்குகளை சஜித் பிரேமதாச பெற்றுள்ளார். அங்கு கோட்டபாய 26105வாக்குகளளையே பெற்றுள்ளார்.
ஆக வடமாகாணம் பூராக சஜித் அலையே வீசியுள்ளது எனலாம்.
கிழக்கிலும் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்கள் சஜித் வசமே வந்துள்ளன.
மட்டு.மாவட்டத்தில் சஜித் 238649 வாக்குகளையும் கோட்டா 38460வாக்குகளையும் அம்பாறை மாவட்டத்தில்சஜித் 259673வாக் குககளையும் கோட்டா 135038 வாக்குகளையும் பெற்றுள்ளார். திருமலை மாவட்டத்தில் சஜித் 166841வாக்ககளையும் கோட்டா 54135வாக்குகளையும் பெற்றுள்ளார்.
எனினும் அம்பாறை சேருவில தொகுதிகள் கோட்டா வெற்றிபெற்றுள்ளமையையும் சுட்டிக்காட்டக்கூடியது.
அம்பாறைத்தேர்தல்தொகுதியில் கோட்டாபய ராஜபக்ச 89674வாக்ககளையும் சஜித் 42242 வாக்ககளையும்பெற்றுள்ளனர்.அதேபோ ன்று சேருவில தொகுதியில் கோட்டா 31303வாக்குகளையும் சஜித் 28205வாக்ககளையும் பெற்றுள்ளார்.
அதாவது வடக்கு கிழக்கில் கோட்டாவை விட சஜித் முன்னிலையில் நின்றுள்ளார்.
வெற்றியைத்தீர்மானித்த வாக்குகள்
முழு நாட்டிலே கோட்டபாய ராஜபக்ச பெற்ற வாக்குகள் 69லட்சத்து 24 ஆயிரத்து255 வாக்குகள் சஜித்பிரேமதாச பெற்ற வாக்குகள் 55லட்சத்து 64 ஆயிரத்து239 வாக்குகள் அதாவது சுமார் 14லட்சம் வாக்குகளால் கோட்டா வெற்றிபெற்றுள்ளார்.
இதன்காரணமாக கோட்டாவின் வெற்றியைத் தீர்மானித்த வாக்குகளாக வடகிழக்கு தமிழ் முஸ்லிம் வாக்குகளை விட தென்னிலங்கை சிங்கள வாக்குகளாக திகழ்வதைக்காணலாம். இவ்வாக்குகள் நாட்டில் சிறுபான்மை மக்களில் வெற்றி தங்கவில்லை.எனினும் அவர்களை அரவணைத்துச்செல்லவேண்டும் என்ற செய்தியை சொல்கிறது. கோட்டபாய கூட ஆரம்பத்திலேயே தமிழ்பேசும் வாக்குகள் இல்லாமலே நான் வெற்றிபெறுவேன் என்று பகிரங்கமாகவே கூறியதையும்இங்கு பதிவிடுதல் பொருத்தமென கருதுகிறேன்.
வடக்கில் கோட்டா தோல்வியடையவில்லை மாறாக தோல்வியடைந்தது த.தே.கூட்டமைப்பே என்று பாராளுமனற் உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளமை ஈண்டுகுறிப்பிடத்தக்கது.
மாவட்டரீதியில் யாழ்.முதலிடம்!
வட-கிழக்கில் மாவட்டரீதியில் பார்த்தால் யாழ்ப்பாண மாவட்டம்தான் அதிகூடிய வாக்குவித்தியாசத்தில் சஜித் முன்னிலையிலுள்ளார். இதுவே வட-கிழக்கில் அதிகூடிய வாக்கு வித்தியாசமாகும்.
சம்மாந்துறைத் தொகுதியில் 86.22வீத வாக்குகள் சஜித்திற்கு.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை தொகுதியிலுள்ள பதிவுசெய்யப்பட்ட 85911 வாக்காளர்களில் 67166 வாக்காளர்கள் வாக்களித்தனர். 494வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.செல்லுபடியான வாக்குகள் 67165 ஆகும்.
இந்த 67165 வாக்காளர்களில் 57910 வாக்காளர்கள் சஜித்திற்கு அதாவது 86.22 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டன. கேர்டாவிற்கு ஆக 7151வாக்குகளே அதாவது 10.65 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறைத்தொகுதியில் தமிழ் முஸ்லிம் வாக்காளர்களே உள்ளனர். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் உள்ளபோதிலும் தமிழ் வாக்காளர்களளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மு.கா. ஜ.தே.க. மற்றும் த.தே.கூட்டமைப்பின் பிரசாரம் காரணமாக சஜித்திற்கு 86.22வீதமான தமிழ்வாக்குகள் அளிக்கப்பட்டன என கருதஇடமுண்டு.
அதன்படி சம்மாந்துறைத் தொகுதியில் அமோக வெற்றியீட்டியதற்கு தமிழ் பேசும் இரு சமுகங்களும் பாரிய பங்களிப்பைச்செய்துள்ளன.
வட-கிழக்கிற்கு அப்பால் மலையகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் சமுகத்தினரும் கணிசமான ஆதரவை சஜித்திற்கு வழங்கியுள்ளனர் என்பதும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. தென்னிலங்கையில் சஜித்பிரேமதாச பெரும்பான்மையின வாக்குகளைப்பெறுவதில் கோட்டைவிட்டுவிட்டார் என்றே கூறவேண்டும். சுமார் 14லட்சம் வாக்குகள் மாறிவிட்டன. அதற்கும் கோட்டா அணியினர் சிறுபான்மைன்மையினருக்கு நன்றிசொல்லவேண்டும்.
மொத்தத்தில் சிறுபான்மையினரை துரும்பாக வைத்து பெரும்பான்மையின வாக்காளர்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவான புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு அவர்களது தேவைகள் அபிலாசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய ஆவன செய்யவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய ஜனாதிபதி கோட்பாய ராஜபக்சவின் கன்னிஉரையில் அனமதபேதமற்ற நாட்டை உருவாக்குவேன் எனக்கு வாக்களித்த வாக்களியாத அனைத்துமக்களுக்கும் தேசியத்தலைவரென்ற அடிப்படையில் சேவையாற்றுவேன் என்று கூறியிருப்பது வரவேற்புக்குரியது. எனவே அவர் இன்றைய அமைச்சர்களைப்போல் தங்கள் தங்கள் இனத்திற்கு சேவையாற்றுபவர்கள் போலல்லாமல் தேசியத்தலைவரா சகல இனமக்களுக்கும் சேவையாற்றவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
வி.ரி.சகாதேவராஜா
Attachments area