சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் வந்தாறுமூலைக் கிராமத்தினைச் சேர்ந்த 50. வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பி கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் 21. ஆம்திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதனை பரிஸ் நாட்டில் வசிக்கும் சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர் சோமசுந்தரம் செல்வம் என்பவரின் அணுசரனையில் இடப்பெற்றன.
இந் நிகழ்வில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த சுவிஸ் உதயம் அமைப்பின் உப பொருளாளர் விஸ்வலிங்கம் பேரின்பராஜா அவர்களும் மற்றும் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் உப செயலாளர் மகளீர் அமைப்புத் தலைவி திருமதி செல்வி மனோகர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிதி உதவியினை வழங்கி வைத்த சோமசுந்தரம் செல்வம் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களும் நன்றிகளையும் தெரிவித்தனர்.