சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் பெற்றோரை இழந்து உறவினர்களின் பராமரிப்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் பாடசாலை மாணவிகளுக்கு வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் தையல் இயந்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வு 27 ஆம் திகதி புதன்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் போரதீவில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு நாவக்குடாக் கிராமத்தில் வசிக்கும் செல்வி .த.தனுசியா எனும் மாணவிக்கும் அவரது சகோதரிக்கும் வாழ்வாதரம்,கல்வி முன்னேற்றத்திற்காகவே இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளைத் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் ,உபபொருளாளர் பேரின்பராஜா,கிழக்குமாகாணக்கிளையின் உபதலைவர் ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன்,செயலாளர் எஸ்.குவேந்திரன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உபசெயலாளர் திருமதி செல்வி மனோகர்,கணக்குப்பரிசோதகர் நாகேந்திரன்,உறுப்பினர் அகிலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவ் உதவியினை வழங்கிய சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர்,செயலாளர்,பொருளாளர் மற்றும் அங்கத்தவர்கள் அதேபோன்று கிழக்குமாகாணக்கிளையின் உறுப்பினர்களுக்கும் அம் மாணவி நன்றி தெரிவித்துள்ளார்
சுவிஸ் உதயம் அமைப்பானது கிழக்குமாகாணத்தில் பல்வேறு உதவிகளைச்செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது