கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தனது ஆளணிவரைபை நாளது தேதிவரை செய்ததில்லை. இற்றைவரை அது நடைபெறவில்லை. அவ்வாறான தவறினால் பாதிக்கப்படுவது வேலையற்ற பட்டாதரிகளாவர். என மட்டக்களப்பு மாவட்ட முதன்மைப் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாலட்ட அபிவிரத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஜீ.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றிருக்கம் அழகியற்பாட த்திற்கான பட்டதாரிகள் இன்று அவரை சந்தித்து கலந்துரையாடினர் அகலந்துரையாடலில் கலந்த கொண்ட ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்து விளக்குகையில், ஒரு திணைக்களம் தனக்கு தேவையான ஆளணித் தொகையை நாளது தேதிவரை நிரைபடுத்தி வைத்திருக்க வேண்டும். இந்த செயற்பாடடு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் ஒருநாளும் இருந்ததில்லை அதிலும் அழகியற் பாட நெறிகளை அத்திணைக்கழம் கவனித்ததாக தெரியவில்லை. தமக்கு எத்தனை ஆசிரியர் என்னென்ன பாடங்களக்கு தேவையென்று தெரியாத போது, அப்பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியா்களை எவ்வாறு நியமிப்பது? அழகியற் பாடங்கள் ஒரு தொகை இருக்கிறத. அதற்குத் தேவையான ஆசிரியர்கள் அதிக அளவில் தேவைப்படகின்றனா். இது நமக்கு நமத கிராம மட்டத்தில் தெரிகிறது. இதனை ஒன்றுதிரட்டி வகைப்படுத்தி எடுக்க திணைக்களத்தால் முடியாமலிருப்பது ஏன்?
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் தேவையான அழகியற் பாட ஆசிரியர்களின் எண்ணிக்கை தெரியுமாகவிருந்தால் நாம் இதனை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து ஆசிரிய நியமனத்திற்கான நிதியை பெற முயற்சிக்கலாம். செய்ய வேண்டிய முதற்பணியை அவர்கள் தவற விடுகிறாா்கள். அதனால் அடுத்த நகர்வுக்கு அரசியல்வாதிகளாவ் செல்ல முடியாதிருக்கிறது. இதுபற்றி மாகாணக் கல்வித் திணைக்கழத்திற்கு விரிவான கடிதத்தினை அனுப்பி விபரங்கனை பெற இருக்கிறேன் என்றாா்.