வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவுப் பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டிலும் சுவிஸ் நாட்டில் வாழும் கஜன் மற்றும் தியாகராஜா ஆகியோரின் நிதி உதவியின் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் தலைமையில் நடைபெற்றது.
அண்மையில் நாட்டில் பெய்த மழையினால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் முனைத்தீவுப் பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு இவ் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ் நிவாரணப் பொதிகளை சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் ,பிரதித் தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன், அமைப்பின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உபசெயலாளர் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் கணக்குப் பரிசோதகர் நாகேந்திரன், உறுப்பினரும் பிரபல கணித ஆசிரியருமான குணசேகரம் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்தனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுவிஸ் உதயம் அமைப்பு அண்மைக்காலமாக இவ் உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.