அனர்த்தத்திலும் அழியாத அம்மனின் அதிசயம்! அற்புதம்!!

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையால் பாரிய அனர்த்தம் நிகழ்ந்துவருகிறது. அத்தகைய அனர்த்தத்திலும் ஆலயத்தை அழியாமல் பாதுகாத்த அம்மனின் அதிசய அற்புத நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
 
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (23) பாணமை உகந்தமலை முருகனாலயத்திற்கு அப்பால் 15மைல் தொலைவிலிருக்கும் நடுக்காட்டிற்குள் குமுக்கன் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த குமுக்கன் அம்னாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
 
கடந்த இருவாரகாலமாக அப்பகுதியில் வெள்ளம் கரைபுரண்டோடியது. நேற்றுமுன்தினம் ஆலயத்தைச்சுற்றியிருந்த பாரிய மரங்கள் பல வேரோடு சாய்ந்தன. இருந்தபோதிலும் ஒரு மரம் கூட ஆலயத்தில் விழவில்லை. மிகவும் தொன்மைவாய்ந்த இவ்வாலயத்தின்மீது ஒரு சிறுமரம்வீழ்தாலே அழிந்துவிடும்.
 
ஆனால் பாரிய மரங்கள் வேரோடு அப்படியே வீழ்ந்தும்கூட ஒன்றுகூட ஆலயத்தின்மீது விழாதமை குறித்து அம்மன் பக்தர்கள் அதிசயிக்கின்றனர். ஆச்சரியப்படுகின்றனர்.
 
இது அம்மனின் அருளாக அற்புத சக்தியாக இருக்கக்கூடுமென அவர்கள்’ நம்புகிறார்கள்.
கிழக்கின் தென்கோடியின் அந்தத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் குமுக்கன் பத்தினி அம்மன் ஆலயம் கிழக்கையும் ஊவாவையும் பிரிக்கும் குமுக்கன் (கும்புக்கன் ஓயா) நதிதீரத்திலே அமைந்துள்ளது. அங்கு குடிமனைகள் இல்லை. ஆலயத்தைச் சுற்றவர பாரிய காட்டுமரங்கள் அடர்ந்த பற்றைகள் கொடிய மிருகங்கள் பறவைகள் இருக்கின்றன.
 
வருடத்திற்கொருமுறை கதிர்காமம்பாதயாத்திரை செல்வோர் இவ்வாலயத்தைத்தரிசித்துஅங்கு தரித்து ஊவாவிலுள்ள வில்பத்துக்காட்டுக்குள் பிரவேசிப்பது வழக்கம். உகந்தமலை முருகானலயத்திற்குச் செல்வோரும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனுமதிபெற்று குமுக்கன் ஆலயத்திற்குச்சென்று பொங்கிவழிபட்டுவருவதும் வழக்கம்.
 
அத்தகைய ஆலயத்தில்தான் இவ் அற்புதம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts