நெல்லுக்கான விலை குறைந்து சென்றால் விவசாயிகள் விபரீதமான முடிவுகளை எடுக்க நேரிடும் – ஊடகங்கள் வாயிலாக எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச விவசாயிகள் தமது அறுவடை நெல்லுக்கான விலையினை உயர்த்தித் தருமாறு   ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுணதீவு பிரதேசத்தின்  ஔிமடு கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் நேற்று சனிக்கிழமை (18ம் திகதி) இவ் ஊடக சந்திப்பு நடைபெற்றது.

இப் பிரதேசத்திலுள்ள விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இங்கு விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த விவசாயத்தை செய்வதற்கு தாலிக்யைடியை அடகு வைத்து, வங்கியில் கடன் பெற்று  கடன் சுயையுடன் விவசாயிகள் விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர் 

இங்கு தற்போது நெல்லின் விலை 2200 ரூபா செல்வதாகவும் இது குறைந்தது 3000 ரூபாவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதுடன் இவ்வாறு நெல்லின் விலை நாளுக்கு நாள் குறைந்து செல்லுமானால் விவசாயிகள்  கடன் சுமையில் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகும் என்பதையும் கூறிக்ெகாள்கின்றோம்.

 

அரசாங்கத்தால் அரிசியின் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது ஆனால் நெல்லின் விலையை எவ்வளவு என நிர்ணயிக்கு  இங்கு யாரும் இல்லை. சென்ற வாரம் 3000 ரூபா விற்பனையான நெல் இன்று 2200 ரூபாவாக உள்ளது. எனவும் இங்கு விவசாயிகள் தெரிவித்தனர்

Related posts