பட்டப்பகலில் மாகாண உயரதிகாரியை ஏமாற்றியவர்கள் உறுப்பினர்களையும் மக்களையும் எவ்வாறு ஏமாற்றுவார்கள்?

ஓர் உயர்சபையில் பட்டப்பகலில் நேரடியாகக்கலந்துகொண்ட ஒரு மாகாண உயர் அதிகாரியை ஏமாற்றியவர்கள் இதுவரை எவ்வாறு மாநகரசபை உறுப்பினர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றி வந்திருப்பார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெளிவாகிறது.
 
இவ்வாறு இறுதியாக நேற்று நடைபெற்ற கல்முனை மாநகரசபையின்  விசேட அமர்வைப்பகிஸ்கரித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
தாம் ஏன் மாநகரசபை அமர்வைப் பகிஸ்கரித்தோம் என்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர்தொடர்ந்து கருத்துரைக்கையில்:
மாநகரசபையின் விசேட அமர்வின்போது ஆசன ஒழுங்குமுறைமை மீறப்பட்டுள்ளது.
 
நாம் வழமையாக அமரும் ஆசனங்களில் ஆளுந்தரப்பு உறுப்பினர்களை அமரவைத்து சபையை காட்டியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கான உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் கலந்துகொண்ட அமர்விலே இத்துணை சுற்றுமாற்றைச் செய்தவர்கள் எவ்வாறு உறுப்பினர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றுவார்கள் என்பது புலனாகிறது.
 
எமது கல்முனைவடக்குப்பிரதேச செயலகப்பிரிப்பிற்கு எதிர்ப்பாகஇருக்கும் மு.காங்கிரசோடு ஒருபோதும் கூட்டாக இருக்கப்போவதில்லை.அதன்காரணமாகவே பிரதிமேயர் பதவிக்கு நாம் போட்டியிடவில்லை.
 
மற்றது நாம் ஒருபோதும் மேயர் பதவிக்கோ பிரதிமேயர் பதவிக்கோ ஆசைப்பட்டதில்லை. இருவருடங்களுக்கு முன்பு எமது கட்சி மு.காவோடு இணைந்து பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கேட்டதற்கே நாம் ஒப்புக்கொள்ளாமல் எதிரணியிலே அமர்ந்தவர்கள்.
 
அப்படியிருக்கையில் இம்முறை நாம்பிரதிமேயர் பதவிக்கு ஒருபோதும் சோரம் போவதற்கு தீர்மானிக்கவில்லை. அதாவது பிரதிமேயர் பதவிக்கு போட்டியிட நாம் ஒருபோதும்தீர்மானித்திருக்கவில்லை. சோரம்போன ஒரு உறுப்பினரிடம் எமது இளைஞர்கள் போய்க்கேட்டதற்கும் அவர் நான் போட்டியிடவிருக்கிறேன்.எமது பங்கு என்று மறுத்திருக்கிறார்.
எனினும் இறுதிநேரநிலைமை அவரை மாற்றியிருந்தது. 
 
கல்முனை மாநகரசபை பிரதி மேயர் வாக்கெடுப்பு ஏன் பகிஸ்கரித்தோம்? – த.தே.கூ உறுப்பினர்களின் கருத்து
 
கல்முனை மாநகரசபையின் பிரதி மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பு நேற்று முன்னதினம் (12)  சபையில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் உள்ளடங்களாக 26 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
 
பிரதி மேயர் தேரிவு இடம்பெறும் தினத்திற்கு முன்பிருந்தே உறுப்பினர்கள் மத்தியில் பல கருத்துக்கள் பரிமாற்ப்பட்டிருந்தன
பிரதி மேயர் பதவியை தமிழ் உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  தலைமையகத்தில் ஆலோசிக்கப்பட்டிருந்ததாகவும் இதற்கு பின்னால் சில சூழ்ச்சிகள் இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.
அத்தோடு கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்திற்கு திர்வு கிடைக்கும்வரை இவற்றுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முஸ்லிம் அரசியல் தரப்புடன் இணக்கப்பாடு மற்றும் பதவிகளுக்கு இடமளிக்க கூடாது எனும் கருத்து கல்முனை பிரதேச பொதுமக்கள் இளைஞர்கள் மத்தியில் காணப்பட்டது.
 இந்த கருத்துக்கள் தமிழ் கட்சியின் தலைமைகளுக்கும் தெரிவிக்கப்ட்டிருந்தன.
இக்கருத்துடன் சில தமிழ் உறுப்பினர்கள் இருந்தனர் சில தமிழ் உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை யாருக்கும் அளிப்பதில்லை வெற்றியோ தோல்வியோ தாங்கள் போட்டியிடுவோம் எனும் கருத்திலும் சில உறுப்பினர்களும் காணப்பட்டனர்.

Related posts