மட்டக்களப்பில் “பன்முகப்பார்வையில் சுவாமி விபுலானந்தர் ” எனும் நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையினால்  திங்கட்கிழமை(09.03.2020)காலை 9.30 மணியளவில் வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில்  சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் “பன்முகப்பார்வையில் சுவாமி விபுலானந்தர் ” எனும் நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.
 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசனின் உதவி பொது மேலாளர் சுவாமி நீலமாதவானந்தாஜீயும்,அருட்பணியாளர் ஏ.ஏ.நவரெட்ணம் அடிகளாரும் ஆன்மீக அதிதிகளாக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவும்,சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைகழகத்தின் கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஜீ.கென்னடியும்,கௌரவ அதிதிகளாக பல்துறை கலைஞர் க.பரராஜசிங்கம்,கலாபூஷனம் ஆ.மு.சி.வேலழகனும்,
 
அழைப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன்,முன்னாள் மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்(திட்டமிடல்)எஸ்.ஹரிஹரராஜ்,ஓய்வு நிலை பேராசிரியர்களான எஸ்.மௌனகுரு,எஸ்.செல்வராஜா
மற்றும் இலக்கியவாதிகள், கல்வியியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள்,வர்த்தகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,சுவாமி விபுலானந்தர் நுற்றாண்டு சபையின் உறுப்பினர்கள்,எனப் பலரும் சங்கமித்திருந்தார்கள்.
 

இந்நூல் வெளியீட்டு விழாவில் முதலில் அதிதிகளை மாலை அணிவித்து இன்முகத்துடன் வரவேற்றதுடன் எமது சமய பண்பாட்டு விழுமியங்களுடன் மங்கள விளக்கேற்றி வைத்து நிகழ்வுகள் ஆரம்பமாகியது.அதன் பின்பு வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன்,நூல் அறிமுகவுரை,விஷேட கௌரவம் வழங்கப்பட்டு,நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.அதன்பின்பு அதிதிகள் உரை இடம்பெற்றது.இதன்போது ஓய்வுநிலை பேராசிரியர் கலாநிதி செ.யோகராசா பொன்னாடை போற்றி விஷேட கௌரவம் வழங்கப்பட்டதோடு அதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Related posts