இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்க்க சென்றை அதில் குதித்து காணாமல் போயுள்ளார். வென்னப்புவ, லுனுவில பிரதான பாலத்திற்கு சென்ற இளைஞனே திடீரென பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.
தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுக்கும் போது, அழைப்பு மேற்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் குதித்துள்ளார். எனினும் அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் தனக்கு நெருக்கமான சிலருடன் வெள்ளத்தை பார்த்து கொண்டிருந்த நிலையில் திடீரென குதித்துள்ளார்.
காதல் தொடர்பினால் ஏற்பட்ட மனரீதியான குழப்பம் காரணமாக அவர் வெள்ளத்தில் குதித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் காணாமல் போயுள்ள வென்னப்புவ பிரதான பாடசாலை கல்வி கற்கும் லக்ஷான் என்ற 17 வயதுடைய இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
லுனுவில பாலத்தின் மீதிருந்து குதிப்பதற்கு முன்னர் குறித்த இளைஞர் அருகில் இருந்த நபரிடம் தனது கையடக்க தொலைபேசியை காதலியிடம் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
நீரில் குதித்த இளைஞனை தேடுவதற்கு வென்னப்புவ பொலிஸார் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது