பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை வழங்கி வைக்கும் நிகழ்வு !!

இலங்கையை ஆட்கொண்டிருக்கும் கொரோனா  வைரசை நாட்டில் இருந்து ஒழிக்கும் முகமாக அரசு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் இக்காலகட்டத்தில் சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர்  தலைமையில் குருதிக்கொடை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (5) காலை பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
 
அம்பாறை மாவட் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆஷா கருணாரத்ன, அம்பாறை மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஜெயந்த ரத்னாயக்க, கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க விஜயயசுந்தர ஆகியோரின்  நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக பொலிஸ் பிரிவு ,மத தலைவர்கள், விளையாட்டு கழகங்கள், இணைந்து கொரோணா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குருதி கொடையினை வழங்கி வைத்தனர்.
 
 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பு வைத்திய அதிகாரி என். ரமேஷ் ,தலைமையிலான வைத்தியர், தாதியர் , நாவிதன்வெளி பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததான நிகழ்வை முன்னெடுத்தனர்.

Related posts