சமகால கொரோனா நெருக்கடிக்கால நிலையைக்கருத்திற்கொண்டு அரசாங்க சுற்றுநிருபத்திற்கமைய எமது அலுவலகம் மட்டுப்படுத்திய 50வீத அலுவலர்களுடன் இயங்கஆரம்பித்துள்ளது. அதற்காக சாதாரண தேவைகளுக்காக அலுவலகம் வரவேண்டாம்.
இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதகாலத்திற்குப்பிறகு -22 -அலுவலகம் சுமாராக ஆரம்பித்தபோது கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான கொரோனாவிற்குப்பின்னரான முதல் அமர்வு பணிமனையில் இடம்பெற்றது.
முன்னதாக அனைவரும் நுழைவாயிலில் உடல்வெப்பநிலை அளவிடப்பட்டு சவர்க்காரமிட்டு கைகழுவியபிற்பாடு அமர்வுமண்டபத்தில் சமுகஇடைவெளியைப்பேணி முகக்கவசம் சகிதம் அமர்த்தப்பட்டனர்.
அங்கு எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் அரச நடைமுறைகள் தொடர்பாக பணிப்பாளர் விளக்கமளித்தார். இவைஅதிபர்ஆசிரியர்களுக்கும் எத்திவைக்கப்படவேண்டும் எனவும் கூறப்பட்டது.
அங்கு பணிப்பாளர் நஜீம் மேலும் கூறுகையில்;;
அலுவலகம் திங்கள் புதன்ஆகிய தினங்களில் திறந்திருக்கும். எனினும் புதன்கிழமைமாத்திரமே சேவைநாடிகளுக்கு திறந்துவிடப்படும். அன்று வரும் சேவைநாடிகள் முதலில் நுழைவாயிலில் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கைகழுவியபின்னர் சகலதரவுகளும் பதியப்பட்டபின்னரே உள்நுழையமுடியும்.
புதன்கிழமைகளிலும் சம்பஏற்றம் பதவியுயர்வு போன்ற சாதாரண சேவைக்காக ஆசிரியர்கள் வருகைதரவேண்டாம். ஏனைய அத்தியாவசிய தேகைள் எனின்அவற்றைமுன்றலில் குறித்துச்சொல்லவேண்டும். அதற்கான தீர்வு எம்மால் வழங்கப்படும்.அதுவும் ஒவ்வொருவராகவே அனுமதிக்கப்படுவர்.
கல்விசார் உத்தியோகத்தர்கள் செவ்வாய் வியாழன்ஆகிய தினங்களில் அலுவலகத்திற்கு கொரோனா பாதுகாப்பு நடைமுறையைக்கடைப்பிடித்து சமுகமளிக்கவேண்டும்.
ஏனைய அலுவலர்கள் நிலைமைக்கேற்றால்போல் 50வீத அளவிற்கு தினம் தினம் அழைக்கும்போது வரவேண்டும்.
அலுவலக நுழைவாயில் மூடியே வைக்கப்பட்டிருக்கும்.உரிய அனுமதியுடன் புதன்கிழமைகளில் மட்டும் அதிகாரிகளைச் சந்திக்கலாம்.
கல்விசார் உத்தியோகத்தர்கள் இக்காலப்பகுதியில் அதிபர்ஆசிரியர்கள்மாணவர்களை இணையவழியில் கற்றல்கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட தூண்டவேண்டும். சம்மாந்துறை முஸ்லிம் மத்தியகல்லூரி போன்ற பல பாடசாலைகள் தாமாகவே அதனை ஆரம்பித்துள்ளன. வீட்டுத்தோட்டம் செய்யவும் ஊக்குவிக்கவேண்டும்.
நாம் இதுவரைஇணையவழியில் ஆறு பரீட்சைகளைநடாத்தியுள்ளோம். அதற்கு நல்ல வரவேற்புக்கிடைத்துள்ளது. 4000மாணவர்கள்வரையில் தேசியரீதியில்பங்கேற்றனர். அது எமக்கு உற்சாகத்தைத்தந்தது.
வாட்ஸ்அப் செயலி வசதியில்லாத மாணவர்க்கு அதற்கான பத்திரங்களை பொலிஸ்அனுமதியுடன்அவரவர் வீடுகளுக்கு விநியோகித்தோம்.
சிலகாலத்திற்கு இந்நடைமுறை அமுலில்இருக்கும்.அதுவரை அதிபர்கள் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தவாறு இப்பணிகளில் கட்டாயம் ஈடுபடவேண்டும். சகலதரவுகளும் பிரதமசெயலாளருக்கு அனுப்பிவைக்கப்படும்.