கல்முனை வர்த்தக சங்கத்தினால் 07 மில்லியன் நிதி உதவி மக்களுக்கு வழங்கி வாய்ப்பு

கோவிட்- 19 (கொரோனா வைரஸ்) தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கு சட்டம், மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக அன்றாட வருமானத்தை இழந்த மக்களின் பசியை போக்கும் வகையில் கல்முனை வர்த்தக சங்கம் சுமார் 7 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியினை கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து அறவிடுசெய்து கல்முனை பிரதேசத்தில் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு இன்று வழங்கி வைத்தனர்

 

கல்முனை வர்த்தக சங்கத்தினர் 3 கட்டங்களாக செயற்படுத்திய இத்திட்டம் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்களுக்கு ரூபாய் 968,000 நிதியும், கல்முனை இஸ்லாமாபாத் மக்களுக்கு ரூபாய் 750,000 நிதியும் பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கல்முனை பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அங்குள்ள 19 பள்ளிவாசல்களின் ஊடாக இன்று (6) நிவாரணத்திற்கான நிதி வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ் கே.எம் சித்தீக் அவர்களின் தலைமையில் கல்முனை மாநகர சபை சபா மண்டபத்தில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, கல்முனை வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளும் மற்றும் பள்ளிவாசல்களின் பிரதம நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts