பாரம்பரிய யாழ்.கதிர்காம பாதயாத்திரை 24மணிநேரத்துள் கைவிடப்பட்டுள்ளது.
வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நதி ஆலயத்தின் விசேடபூஜையுடன் வேல்சாமி தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரை மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் கைதடி சிவன் ஆலயத்தைச் சென்றடைந்ததும் கைவிடநேரிட்டது.
அதுதொடர்பாக தலைவர் வேல்சாமி தெரிவிக்கையில்:
சமகால கொரோனா சூழ்நிலையைக்கருத்திற்கொண்டு பாதயாத்திரைக்கு இடமளிக்கமுடியாது என அங்குவந்த பொலிசார் கூறினர்.
இதுவும் முருகப்பெருமானின் செயல்தான் என நினைந்து சட்டத்திற்கு மதிப்பளித்து பாதயாத்திரையை கைவிட்டோம்.
சிலவேளை ஒரு மாதத்துள் சூழ்நிலை சரிவருமானால் உகந்தமலை முருகனாலயத்திலிருந்து பாதயாத்திரையை மேற்கொள்ளலாமென எண்ணுகிறோம். அதற்கும் முருகன்தான் அருள்புரியவேண்டும். என்றார்.