மக்களை உசுப்பேத்தி வாக்குப் பெற்றவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்றும் வாக்களித்த மக்கள் கூலித் தொழில் செய்கின்றார்கள்

மக்களை உசுப்பேத்தி வாக்குப் பெற்றவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்றும் வாக்களித்த மக்கள் கூலித் தொழில் செய்கின்றார்கள் என்றும்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் ஞானமத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.
 

களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உதட்டால் தேசியம் பேசிப் பேசி, மக்களை உசுப்பேத்தி, வாக்குகளைப் பெற்று வாழ்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் கூலித் தொழில் செய்கின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

இதனை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள் எனக் கூறிய, “நாடு கேட்டோம், தமிழ் நாடுகேட்டோம், ஒன்றுபட்ட நாட்டுக்குள் சமஷ்ட்டி கேட்டோம்” என மார்தட்டிப் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால், கல்முனை பிரதேச செயலகத்துக்கு கணக்காளரைக்கூட பெற்றுத்தர முடியவில்லையெனக் குற்றஞ்சாட்டினார்.

கல்முனைக்கு கணக்காளரை நியமிக்காத தமிழ்தேசிய கூட்டமைப்பு வடகிழக்கு தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சனையையோ,சமஸ்டியையோ,அல்லது தேசியத்தையோ ,தமிழ்மக்களுக்கு தீர்வையோ பெற்றுக்கொடுக்க மாட்டார்கள்.தமிழ்மக்களிடம் தமிழ்தேசியகூட்டமைப்பு போலித்தேசியம் பேசி தமிழ்மக்களை வாக்களிக்க சொல்லி 73 வருடங்களாக ஏமாற்றி வந்திருக்கின்றார்கள்.தமிழ்மக்கள் கண்டது ஒன்றுமில்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பினரும்,அவரது குடும்பத்தாரும் நன்மை அடைந்திருக்கின்றார்கள்.தமிழ்மக்கள் நடுத்தெருவில் இருக்கின்றார்கள்.இதற்கு காரணம் தமிழ்தலைமைதான்.தமிழ்மக்களின் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்யாதவர்கள் இன்று போலித்தேசியம் பேசுகின்றார்கள்.இதற்கு தமிழ்மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தக்கபாடம் புகட்டவேண்டும்.இல்லாவிட்டால் கிழக்கின் இருப்பு,நிருவாகம்,கேள்விக்குறியாகி மாற்று சமூகத்திடம் கையேந்தும் நிலை ஏற்படும்.

இன்று மாற்றுச்சமூகத்தினர்  அரசாங்கத்துடன் பேரம்பேசி,அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியை ஏற்றுக்கொண்டு அபிவிருத்தி,பொருளாதாரம்,வேலைவாய்பை பெற்று நிம்மதி அடைந்திருக்கின்றார்கள்.தமிழ்மக்கள் தொடர்ச்சியாக வறுமையாக வாழ்வதையே தமிழ்தலைமைகள் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றார்கள்.

“பிரபாகரனால் பெற்றுத்தர முடியாத ஈழத்தையோ, உரிமையையோ எவராலும் பெற்றுத் தர முடியாது என்பதை நான் ஆணித்தரமாகக் கூறுகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts