கிருபைராஜா அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்

துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் சாமித்தம்பி கிருபைராஜா அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
 

துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ்கலவன் பாடசாலையின் அதிபரும்,சிறந்த தமிழ் புலமையாளரும்,சமயப்பற்றாளருமான சாமித்தம்பி-கிருபைராஜா மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரீ.கருணாகரன் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக 2020.5.19 திகதியன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் 1.6.1992 இல் அரசசேவையில் ஆசிரியராக இணைந்துகொண்டார்.பேராதெனிய பல்கலைக்கழகத்தில் படிப்பை மேற்கொண்டு கலைப்பட்டதாரியாக தனது பட்டத்தை முடித்துக்கொண்டு ஆசிரியையாக கடமையாற்றி வந்தார்.இவர் 15ம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலயம்,இலுப்பைக்குளம் சரஸ்வதி வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் அதிபராகவும்,துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் பிரதியதிபராகவும்,கடமையாற்றி தற்போது துறைநீலாவணை மெ.மி.த.க பாடசாலையின் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.இவர் துறைநீலாவணை இந்து இளைஞர் மன்றம்,ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையில் தலைவராக இருந்து பல சமூக,சமயப்பணிகளை முன்னெடுத்துள்ளார்.

இவர் துறைநீலாவணை கிராமத்தில் மட்டுமல்லாமல் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலும் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எனும் தூரநோக்கில் செயல்பட்டு பல சாதனைகளை தனதாக்கிக்கொண்டார்.தான் கடமையாற்றிய பிரதேசங்களிலும்,அரசசேவையாளர்களிடமும் சிறப்பாக நடந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts