நாவிதன்வெளி ரிஷிபவானின் “சைவ ஒளி” நூல் வெளியீடு.

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 7ம் கிராமம் அன்புவெளியை சேர்ந்த தரம் 9இல் கல்வி பயிலும் அருள்நாயகம் ரிஷிபவானின் கன்னிப் படைப்பான சைவ ஒளி எனும் இந்து சமயம்சார் நூலானது நேற்றைய தினம் புதன்கிழமை 7ம் கிராமம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
 
அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் ஆலோசகர் கே.கிலசனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலய பிரதமகுரு தற்புருஷ சிவாச்சாரியார் சிவஸ்ரீ தி.கு.தேவகுமார் குருக்கள் ஆலய தலைவர் ஜெயக்குமார் கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் த.பூவேந்திரன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் சது/நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அதிபர் திரு.பாலசிங்கம் சது/நாமகள் வித்தியாலய அதிபர் திரு.ராஜகோபால் சது/விவேகானந்தா மகா வித்தியாலய அதிபர் திரு.சாமித்தம்பி ஆசிரியர்களான திரு.ரூபன் திரு.தயாழன் திரு.விமல்ராஜ் திரு.திருநாவுக்கரசு  அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.விஜயராஜா சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுமதி ரஞ்சன் மற்றும் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
இந்நிகழ்வின் போது ஆசியுரையை ஆலய பிரதம குருவும் நூல் ஆய்வுரையை பிரதி அதிபர் த.பூவேந்திரன் அவர்களும் மற்றும் அதிதிகள் உரையில் செல்வன் ரிஷிபவானின் கன்னிப்படைப்புக்கு பாராட்டுக்களையும் அவரது பெற்றோர்களான அருள்நாயகம் மேகலாதேவி தம்பதிகளுக்கு நன்றிகூறி அவரது எதிர்கால படைப்புக்களுக்கான வாழ்த்துகளையும் தெரிவித்தனர். ரிஷிபவானை பொறுத்த வரையில் பாலர் பருவம் தொடக்கம் ஆலயத்தில் சரியைத் தொண்டாற்றி சமய சொற்பொழிவுகளையும் ஆற்றிவருபவர் என்பதோடு அவரது சமயம் சார் ஈடுபாடும் தேடலும்தான் இந்த சைவ ஒளியை பிரசவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts