ஆளுமையுள்ள அரசியல் சாணாக்கியமுள்ளவர்களை பாராளுமன்றம் அனுப்பி எம் சமூகத்தின் உரிமை சார்ந்த அபிவிருத்தியை முன்னெடுப்போம்

ஆளுமையுள்ள,அரசியல் சாணாக்கியமுள்ளவர்களை இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் நூறுவீதம் வாக்களித்து அவர்களை தெரிவுசெய்து  பாராளுமன்றம் அனுப்பி எம் சமூகத்தின் உரிமை சார்ந்த அபிவிருத்தியை முன்னெடுப்போம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் பொறியியலாளர் குழந்தைவேல்-சிவாகரன் தெரிவித்தார்.

 

மகிழுர் கிராமத்தில் புன்கிழமை(24)நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திலே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

இலங்கையில் நான் தமிழ் குடிமகனாக இருந்துகொண்டு தமிழ்மக்கள் படுகின்ற துன்பங்களை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா வாழமுடியாது.கடந்த யுத்தத்தினால் தமிழ்மக்கள் மிகவும் கஸ்டங்களை அனுபவித்தார்கள்.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அடிப்படைத்தேவைகள்,பொருளாதாரம்,ஜீவனோபாயம் உட்பட அனைத்து வசதிகளையும் இன்னும் எமது தமிழ்சமூகம் முழுமையாக அடையவில்லை.இது எனக்கு மிகவும் வேதனையளிக்கின்றது.

நான் அரசியலில் இறங்கனும்,அதில் உழைக்கனும் என்பதில் எனக்கு துளியளவும் விரும்பமில்லை.நான் அரசியலுக்குள் இறங்கனும் என்பதில் விருப்பமில்லை.கடந்த முப்பது வருட காலத்தில் தமிழ்மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ்தலைமைகளால்  தமிழ்மக்களுக்கு ஒன்றும் செய்து கொடுக்கப்படவில்லை என்பதை எமது சமூகத்தில் உள்ள படித்தவர்கள்,புத்திஜீவிகள்,பொதுமக்கள் இன்று உணர்ந்திருக்கின்றார்கள்.

இன்று பார்த்தால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் நிலைமையை பார்த்தால் கவலை அளிக்கின்றது.கிழக்கு தமிழர்களுக்கு சகல அதிகாரங்களுடன் கூடிய அரசியல் சாணாக்கியம் இல்லாமல் கிழக்குத்தமிழர்கள் பல வேதனையை அனுபவித்து வருகின்றார்கள்.தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்பதற்கு பலமுள்ள அரசியல் அதிகாரம் இன்று தமிழ்மக்களுக்கு இல்லை.இதனால் கிழக்குத்  தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போயுள்ளது.இதற்கான முழுப்பொறுப்பையும்  தமிழ்தேசிய தலைமைகள் ஏற்றுக்கொள்ளனும்.தமிழ்மக்களிடம் வாக்குகளை பெற்றுக்கொண்டார்களே தவிர ;வாக்களித்த தமிழ்மக்களை முறையாக கவனிக்கவில்லை.இதற்கான மாற்றத்தை நோக்கி கிழக்கிலே கிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்னெடுத்து வருகின்றது.

கிழக்குத் தமிழ்மக்களுக்கு சகல அதிகாரங்களுடன் கூடிய உரிமை சார்ந்த அபிவிருத்தியை கிழக்குத்தமிழர் ஒன்றியம் உத்வேகத்துடன் முன்னெடுப்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியில் படித்த புத்திஜீவிகளை கொண்டு பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.கிழக்கிலே தமிழ்மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிட்டது.தமிழ்மக்களின் இருப்பை தக்க வைத்துக்கொள்ளனும்.மாற்றத்தை கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தி தமிழ்மக்களின் சகல உரிமைசார்ந்த அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு தமிழ்மக்கள் கிழக்குத்தமிழர் ஒன்றியத்தை பலப்படுத்துங்கள்.ஊனது கட்சியின் சின்னமான உதயசூரியனுக்கு வாக்களித்தும்,எனது விருப்பு இலக்கமான மூன்றுக்கும் புள்ளடியிட்டும் பாராளுமன்றத்து தெரிவு செய்து அனுப்புங்கள்.இதனால் தமிழ்மக்களின் இன்னல்களுக்கும்,விடிவுக்காகவும் உன்னதமாக செயற்படுவேன்.

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை,விவசாயம்,மீன்பிடி,உற்பத்தி சார்ந்த தொழில்த்துறையை எம்மக்களிடம் ஊக்குவித்து தமிழ்மக்களை பொருளாதாரத்தில் உயர்த்திட வேண்டும்.மட்டக்களப்பில் க.பொ.சாதாரணம், க.பொ.த.உயர்தரம் படித்த படித்த தமிழ் இளைஞர்கள்,யுவதிகள் 50,000 பேர் வேலையில்லாமல் தவிக்கின்றார்கள்.எங்கள் மனிதவளங்களைக் கொண்டு எங்களின் பிரதேச பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்போம்.இன்று எம்முடைய சமூகத்தில் படித்தவர்களுக்கு உரித்தான வேலைவாய்ப்புக்கள் வழங்குவதற்கு தமிழ்தேசிய தலைமைகளிடம் முறையான தரவுத்திட்டமிடல் இல்லாமல் இருக்கின்றது.தமிழ்மக்களின் கஸ்டத்தை நீக்குவதற்கு கிழக்குத்தமிழர் ஒன்றியம் முனைப்புடன் இருக்கின்றது.கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்துவதால் தமிழ்மக்களுக்கு ஒன்றுமே கிடைக்கப்போவதில்லை.இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஆளுமையுள்ள அரசியல் சாணாக்கியமுள்ளவர்களை பாராளுமன்றம் அனுப்பி எம் சமூகத்தின் உரிமை சார்ந்த அபிவிருத்தியை முன்னெடுப்போம்.

மட்டக்களப்பில் பெண்கள் தலைமை  தாங்கும் 30,000 மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தர வருமானம் இல்லாமல் பல அசௌரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.இவர்களுக்கு நிரந்தரமான தொழில்பேட்டைகளை அமைத்து அவர்களுக்குரித்தான தொழிலை ஊக்குவித்து நிரந்தர வருமானம் பெறுவதற்கு வழிசமைப்போம்.அதேபோன்று மாவட்டத்தில்  சிறுகைத்தொழில் செய்பவர்களை இனங்கண்டு அவர்களுக்குரிய தொழில்திறன்களை வழங்கி அதிக வருமானத்தை பெறுவதற்கு கிழக்குத்தமிழர் ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.எனவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் உதயசூரியனை பலப்படுத்துங்கள் எனத்தெரிவித்தார்.

Related posts