பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையின் கீழ் முதற்கட்ட பணிகள் நாளை

பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையின் கீழ் முதற்கட்ட பணிகளை ஆரம்பிக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய நாளை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக குழுவினர் ஆகியோருக்காக மாத்திரம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
 
கிருமி தொற்று நீக்கம் செய்தல், சுத்தப்படுத்துதல், பாடங்களுக்கான நேர அட்டவணையை தயாரித்தல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பாடசாலைகளை திறப்பதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதம் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
 
அன்றைய தினம் தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஐ சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகைத்தரவேண்டுமென கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார். தரம் 10 மற்றும் 12ம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் ஜுலை மாதம் 20ம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts