மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அருணாசலம்-ரவீந்திரன் அவர்களின் தேர்தல் அலுவலகம் சனிக்கிழமை(27)கல்லடி பிரதான வீதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நண்பகல் 12.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இத்திறப்பு விழாவின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு இந்து ஆலயங்களின் ஒன்றிய பிரச்சார செயலாளர் க.தியாகராஜா அவர்கள் கலந்து கொண்டு நாடா வெட்டி அலுவலகத்தினை திறந்து வைத்தார்.
அருணாசலம் ரவீந்திரன் அவர்கள் தனது உரையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மொட்டு சின்னத்தில் இலக்கம் 1 இல் நான் போட்டியிடுவதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் ஏனையோரை போன்று இளைஞர்கள் ஆதரவு குறைவானாலும் அவர்களை விட அதிகளவான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவேன்.மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மொட்டுச் சின்னத்தை பலப்படுத்தி, தமிழ்மக்களின் கண்ணீரை துடைத்தெறிவோம்.நான் தோற்றுப்போனால் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் தோற்றுப்போனதற்கு நிகராகும்.தோற்பது முக்கியமல்ல.மொட்டுச்சின்னத்தை தமிழ்மக்கள் பலைப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நீக்குவதற்கு புதிய அரசாங்கத்தை பலப்படுத்துங்கள்.எமது இளைஞர்,யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை பெற்று நிரந்தர வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம்.இன்று மட்டக்களப்பிலே உள்ள தமிழ்மக்கள் மாற்றுச்சமூகத்திடம் கையேந்தும் நிலை காணப்படுகின்றது.இதனை மாற்றியமைத்து புதிய அரசாங்கத்திடம் படித்தவர்களுக்கேற்றாற்போல் வேலைவாய்ப்பை பெற்றிடுவோம் என்றும் தெரிவித்தார்.
இவ் அலுவலக திறப்புவிழாவில் கட்சி ஆதரவாளர்கள்,பொதுமக்களின் பிரநிதிகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.