சுவிஸ் உதயம் அமைப்பினது நிர்வாக சபைக் கூட்டம்

சுவிஸ் உதயம் அமைப்பினது நிர்வாக சபைக் கூட்டம்  2020 .07. 18 திகதி உதயம் அமைப்பின் அலுவலகத்தில் தலைவர் லிங்கன்.சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திற்கு செயலாளர் அம்பலவாணர் ராஜன்,பொருளாளர் கணபதிப்பிள்ளை .துரைநாயகம் உதவித் தலைவர் காளிக்குட்டி. தியாகராஜா, உதவிச்செயலாளர் சங்கரப்பிள்ளை.சுபாஸ், உதவிப்பொருளாளர் விஸ்வலிங்கம்.பேரின்பராசா மற்றும் உறுப்பினர்களான  கனகசபை சஜந்திரன்,குமாரவேல்தர்மபாலன், எம்.தியாளகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் பெறப்பட்டது.

கொரானா காரணமாக தடைப்பட்டிருந்த கொடுப்பனவுகள் மீளச் செலுத்துவதற்காக தீர்மானிக்கப்பட்டதுடன்  உதயத்தின் 16 வது ஆண்டுவிழா நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாகவும் உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன் சுவிஸ் உதயத்தின் செயற்பாடுகள் வழமைபோல் போஸ்ட் வேங் post Bank ,Raiffeisen Bank  ஆகிய வங்கி மூலம்  உதயத்தின் வங்கிச் செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

சுவிஸ் உதயம் அமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது அத்துடன் 2019 ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டது 

மேலும் நீதிமன்றத் தீர்ப்பை உதயம் உறவுகளுக்கு தெளிவுபடுத்த இருப்பதாக தலைவர் தெரிவித்தார். வழமை போல் இவ் அமைப்புக்கு 15 வருடங்களாக உதவிகளைச் செய்துவரும் அனைவரும் மீண்டும் உதவிகளைச் செய்யவேண்டும் எனவும் வேண்டு கோள்விடுத்துள்ளார். 

 

Related posts