நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் உதயமாகின்றது “எமது தலைமுறை கட்சி” என்ற பெயரில் புதியதொரு கட்சி அதன் அங்குராட்பண நிகழ்வு (29) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நிருபா விடுதியில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பின்னர் கட்சித் தலைவர் சிதம்பரம் கருணாநிதியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது
இதன் போது கட்சியின் பொதுச் செயலாளராக தயாளன் அல்போன்ஸ் மற்றும் பொருளாளராக வேலுப்பிள்ளை சுமங்களா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த கட்சித் தலைவர் சிதம்பரம் கருணாநிதி
பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைக் கடக்கும் வழியில் உள்ள மட்டக்களப்பு நகர் உட்பட தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.
முஸ்லிம் கிராமங்களான ஓட்டமாவடி, ஏறாவூர் மற்றும் சின்ன குவைத் என்று அழைக்கப்படும் காத்தான்குடி போன்றன மிகவும் அழகாகவும் வெளிச்சமாக காணப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளார்கள் ஆனால் இந்த அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் வசந்த மாளிகை கட்டி ஆடம்பரமாக வாழ்கின்றனர். இலங்கையில் எந்த நகர பகுதிகளிலும் இல்லாதவாறு குடிசை வீடுகள் மலசலகூடங்கள் கூட இல்லாத நிலை மட்டக்களப்பில் உள்ளது.
இலங்கையில் நான் அறிந்து 9 மாகாணங்கள் உள்ளன அவற்றுக்கொன தனித்தனி சபைகள் முதலமைச்சர்கள் உள்ளார்கள்.
வடக்கு கிழக்கு இணைக்க வேண்டும் என்பது அறிவீனமான வாதம், வடக்கு கிழக்கில் இரண்டு சிறுபான்மை சமுக முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கிடைக்க வேண்டிய வாய்ப்பை இந்த இணைப்புக் கோரிக்கை என்பது இல்லாதொழித்துவிடும். என அவர் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.