2020 பொதுத் தேர்தலின் வாக்குஎண்ணும் பணிஆரம்பமானது.
இலங்கை சோஷலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றிருந்தன.
நாடு முழுவதும் நிறுவப்பட்ட 12 ஆயிரத்து 985 வாக்குச் சாவடிகளில் 1 கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றனர்.
5 மணி வரையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற பின்னர் சுமார் 8 மணியளவில் வாக்குப் பெட்டிகள் யாவும் பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.
இம்முறை கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைப் பற்றிய அச்சம் இருந்தபோதிலும், வாக்களிப்பு எண்ணிக்கை 70% வீதமாக பதிவாகியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
இறுதி பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் முன்னுரிமை வாக்களிப்பு முடிவுகளை நாளை நள்ளிரவுக்கு முன்பு வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்புகளை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு 10 பில்லியனுக்கும் அதிகமான செலவை மதிப்பிட்டுள்ளது. ஏனெனில் புதிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மேலதிக செலவுகள் ஏற்பட்டதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.