மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கன்னங்குடா-மண்டபத்தடி வீதியானது மிக நீண்டகாலமாக தேய்வடைந்து குன்றும் குழியுமாக காட்சி தருகின்றது என பொதுமக்கள்,கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
கன்னங்குடா கிராமத்திலிருந்து இறக்கத்துவழி கிராமத்திற்கு ஊடாக செல்லும் இரண்டு கிலோமீற்றர் நீளமான தார் வீதியானது இவ்வாறு மோசமான நிலையில் போக்குவரத்து செய்யமுடியாமல் காணப்படுகின்றது.சுமார் 10 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டுள்ளது.உடும்பின் முதுகுபோல் தேய்வடைந்து காட்சி தருகின்றது.
கன்னங்குடா-மண்டபத்தடி வீதியை புனரமைத்து கொடுப்பதுதான் அரசியல்வாதி,அதிகாரிகளின் கடற்பாடாகும்.இவ்வீதியை குறுகிய காலத்திற்குள் புனரமைத்து கொடுப்பதற்கு வவுணதீவு பிரதேச செயலாளர்,பிரதேச தவிசாளர் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.