சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் மண்டூரைச் சேர்ந்த தங்கராசா பரமேஸ்வரன் ஆசிரியரின் கல்விச் சேவையினைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலையில் அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.
இவர் மண்டூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் தங்கராசா இராசம்மா தம்பதியினரின் புதல்வர் என்பதுடன் தனது ஆரம்பக்கல்வி மற்றும் உயர்கல்வியினை மண்டூர் இரமகிருஷ்ண வித்தியாலயத்தில் கற்று ஆசிரியராக முதல் நியமனம் சொறிக்கல்முனை திருச்சிலுவை வித்தியாலயத்திலும் பின்னர் இலுப்பைக்குளம் சரஸ்வதி வித்தியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றி இறுதியாக வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி 31.08.2020 திங்கட்கிழமை ஓய்வுபெற்றுள்ளார்
அதேவேளை வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் வரலாற்றில் அங்கிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் முதலாவது நபர் எனும் பெருமை இவருக்கு உண்டு.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ந.புவிந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது