மட்டக்களப்பில் போதைப் பொருள் பாவனையினை உடனடியாகக் கட்டுப்படுத்த மாவட்ட போதைப்பொருள் தடுப்பு செயலனியினால் துரித நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அன்மைக்காலமாக பரவிவருகின்றது. இதனைக்கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றபோதிலும் அதனை வலுப்படுத்தி துரித நடவடிக்கையினை மேற்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவினால் மாவட்ட போதைத் தடுப்பு செயலனி விசேட குழு மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 
போதைப் பொருள் தடுப்பு மாவட்ட செயலனிக் கூட்டம் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (15) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது மது மற்றும் போதைப் பொருள் பாவனையினை கட்டுப்படுத்தி தடுப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள் பற்றி ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் திணைக்களம், கல்வித் திணைக்களம், கலால் திணைக்களம், வைத்தியசாலை, சிறைச்சாலை, பிரதேச ரீதியாக செயற்படும் சமுதாயம் சார் சீர்திருத்தப் பிரிவு உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவை போன்ற திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளென பலரும் கலந்து கொண்டு கருத்துக்களையும், முன்னேற்ற செயற்பாடுகளையும் முன்வைத்தனர்.
 
இதன்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது நாள்தோறும் நாட்டின் ஏதாவதொரு பிரதேசத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், சம்மந்தப்பட்டவர்கள் கைதாகியதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எமது மாவட்டத்தினை இப்போதைப்பாவனை எனும் பாரிய அழிவிலிருந்து பாதுகாக்கவேண்டிய இருக்கின்றது. இதற்காக பிரதேச செயலாளர்கள் ரீதியாக அல்லது திணைக்களம் ரீதியாக அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டு மாவட்டத்தில் முக்கிய நடவடிக்கையாக இதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். 
????????????????????????????????????

Related posts