தேத்தாதீவு மகாவித்தியாலயத்தில் நிருமாணிக்கப்பட்ட இரண்டுமாடி வகுப்பறைக் கட்டடம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட  தேத்தாதீவு மகாவித்தியாலயத்தில் கிராமிய வீடமைப்பு மற்றும், நிர்மாணத்துறை  மற்றும் கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இரராஜாங்க அமைச்சினால்  11,000,000.00 நிதி ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டடம் வைபவரீதியாக புதன்கிழமை(16) திறந்து வைக்கப்பட்டது.
 
வித்தியாலய அதிபர் ஆ.உதயகுமார், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கட்டடத்தைத் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், பொறியியலாளர் ஏ.எம்.எம்.ஹக்கீம், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு இரண்டு மாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டடத்தைத் திறந்து வைத்ததுடன் புதிய வகுப்பறைகளையும் பார்வையிட்டனர்.  

Related posts