பிரபல எழுத்தாளர் காலமானார்.

நாடறிந்த எழுத்தாளர் “முகில்வண்ணன்” என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை சண்முகநாதன் தனது 78ஆவது வயதில் இன்று
 (17)வியாழக்கிழமை காலமானார்.
 
கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த முகில்வண்ணன் சிறுகதை கவிதை நவீனம் கட்டுரை நாவல் என இலக்கியப்பரப்பில் 20நூல்களை எழுதி வெளியிட்டவராவார்.
 
எழுத்துலகில் 50ஆண்டுகள் எழுதி பொன்விழாக்கண்ட எழுத்தாளன் எனப்பெயரெடுத்தவர்.
 
ஆனந்தக்கண்ணீர் அவள் ஒருதமிழ்ப்பெண் இனியும் நான் இராமன்தான் செல்லக்கிளி  முருகனருள்  பாண்டிருப்புஸ்ரீ திரௌபதை அம்மனாலயம்  பாவைநோன்பு பளிங்குமாளிகை பொங்கல்கவிதைகள் சிங்கராஜா ஒரு தேடல் கட்டுரைக்களஞ்சியம் நீறுபூத்தநெருப்பு எழுத்துலகில் 50ஆண்டுகள் போன்ற காலத்தைவென்ற பல இலக்கியப்படைப்புகளை வெளியிட்டவராவார்.
 
அன்று இப்பிரதேசத்தில் கல்முனை எலக்ரோன் என பிரபலமான பெயரோடு இருந்தவர் தொழிலி;ல் பொறியியலாளாராவார். பஞ்சாயக்குழு உபதலைவராகவிருந்தவர்.
 
1966களிலிருந்து எழுதத்தொடங்கியர். அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தனாதிகாரியாகவிருந்தவர்.
 
இலக்கியப்பரப்பில் கலாபூசணம் வித்தகர் எனப்பலவிருதுகளுக்கு சொந்தக்காரன்.
 
பாண்டிருப்பு துரௌபதைஅம்மனாலய தலைவராக சிலகாலம் இறைபணியாற்றியவர். இலங்கை பிரம்மகுமாரிகள் அமைப்பின் முக்கிய பிரமுகராகஇருந்த ஓர் ஆன்மீகவாதி.கல்முனை நெற் ஊடகவலையமைப்பின் ஸ்தாபக இயக்குனர்சபையின் உறுப்பினராகவும் இருந்தவர்.
 
திருவாசகம் கந்தசஷ்டி போன்ற தமிழ்நூல்களை மொழிபெயர்த்து சிங்களத்தில் எழுதியுள்ளார். இதற்கு இந்துகலாசாரதிணைக்களம் யாழ்ப்பாணத்தில் 2016இல் நடாத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டில்வைத்து பாராட்டிக்கௌரவிக்கப்பட்டார்.
 
இவருக்கு ஒரு மகனும் இருமகள்மாரும் உள்ளனர்.இவர்கள் வெளிநாட்டில் உள்ளனர். இவரது இறுதியாத்திரை இன்று(18)பி.பகல் 4மணியளவில் பாண்டிருப்பு இந்துமயானத்தில் நடைபெறுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related posts