சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடந்த 25.08.2020ம் திகதி காரைதீவு பிரதான வீதியில் விபத்தில் சிக்குண்டு காயமற்றுக் காணப்பட்ட அடையாளம் காணப்படாத வயோதிபரை சம்மாந்துறை வைத்தியசாலையில் பொதுமக்களின் உதவியுடன் அனுமதித்து பின்னர் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்ப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி அண்மையில் மரணமடைந்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பொறுப்பதிகாரி க.யோகானந்தன் அவர்களின் அறிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாகவும் சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு-மணிமாறன் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைவாக இரண்டு மாதங்களுக்கு பின்னர் மரணமானவரின் உடல் நேற்று (15) அன்று சட்டவைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இவர் வீதி விபத்தின் போது தலையில் பலமாக அடிபட்டமையால் சம்பவித்த விபத்து மரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இவரின் உடலை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் பணிப்பாளர் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக அரச செலவில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.