தம்பிலுவிலில் புதன்கிழமை ஒருவருக்கு கொரோனா தொற்று

தம்பிலுவிலில்  புதன்கிழமை  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். 

 
குறித்த நபர் கொழும்பில் பணியாற்றி வீடு திரும்பிய நிலையில் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 
 
குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது
 

இதுவரை கிழக்கு மாகாணத்தில் 

மட்டக்களப்பில் 68 பேரும், 
திருகோணமலை 15 பேரும் ,
கல்முனை 21 பேரும் ,
அம்பாறை  7 பேரும்
கொரோனா தொற்றில் இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts