ஆசிரியர் லதாகரன் 32 வருட கால கல்விப் பணியில் ஓய்வு

துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய  மயில்வாகனம் – லதாகரன் 32 வருட கால ஆசிரியப் பணியில் இருந்து கடந்த 03.11.2020 ஓய்வு பெற்றார்.
 
மட்டக்களப்பு ஏறாவூர்க் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும் கோட்டைக்கல்லாறினை வசிப்பிடமாகக் கொண்ட  மயில்வாகனம் – லதாகரன் ஆரம்பக் கல்வியினை மட்/ஏறாவூர் மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் இரண்டாம் நிலை, உயர்தரக் கல்வியினை மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார். ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் தோற்றி 1988 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்வி ஆசிரியராக மட்/ஏறாவூர் விபுலாநந்தா வித்தியாலயத்தில் முதல் நியமனத்தைப் பெற்றுக் கொண்டார். தனது ஆற்றலாலும் கற்பித்தல் திறமையாலும் மாணவர்களின் கற்றலில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். பாடசாலைக் காலத்தில் பல்வேறு இலக்கியம் சார்ந்த விடயங்களிலும், விளையாட்டுக்களிலும் ஈடுபாடு காட்டினார்.
 
திரு. மயில்வாகனம் – லதாகரன் அவர்கள் ஆசிரியப் பணியில் தன்னை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் 1991/1992 கல்வியாண்டில் இணைந்து பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியராக வெளியேறினார். தொடர் ந்து பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியிலை ஒரு பாடமாகக் கொண்டு கலைமாணிப் பட்டத்தினையும் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்மேற் கல்வி டிப்ளோமாவினையும் பூர்த்தி செய்ததன் மூலம் கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டில் வாண்மையைப் பெற்றுக் கொண்டார்.
 
ஆரம்பக் கல்வி ஆசிரியராகப் பயிற்றப்பட்ட போதும் புவியியல், வரலாறு போன்ற பாடங்களில் கற்பித்தலில் நாட்டம் கொண்டவராகவும் மாணவர்களுக்கு புவியியல், வராலாறு போன்ற  பாடங்களை க.பொ.த.சாதாரணம், க.பொ.த.உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு இலகு நடையில் கற்பித்து மாணவர்களின் அடைவினை உயர்த்தினார். இவரிடம் மாணவர்கள் புவியியல், வராலாறு போன்ற பாடங்களை விரும்பிக் கற்கும் வகையில் உளவியல் சார்ந்து மாணவர்களை அணுகி தன்னலம் கருதாது பாடத்தினைக் கற்பிப்பதில் சிறப்பு வாய்ந்தவராகவும் காணப்பட்டார். இதன் காரணமாக அதிக மாணவர்கள் புவியியல், வராலாறு பாடங்களில் அதிவிஷேட சித்திகளைப் பெற்றுக் கொண்டதுடன் பல்கலைக் கழக அனுமதியினைப் பெறுவதற்கும் உறுதுணையாக இருந்தார்.
 
திரு. மயில்வாகனம் – லதாகரன் அவர்கள் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்/ஏறாவூர் விவுலாநந்தா வித்தியாலயம், மட்/தளவாய் விக்ணேஸ்வரா வித்தியாலயங்ளிலும் பட்டிருப்பு கல்வி வலயத்தில் மட்/கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம்,மட்/துறைநீலாவணை மகா வித்தியாலயத்திலும் தனது பணியினை மேற்கொண்டார். தான் பணியாற்றிய பாடசாலைகளில் மாணவர்களினதும் அதிபரினதும் ஆசிரியர்களினதும் பாராட்டைப் பெற்றமை விசேட அம்சமாகும்.

Related posts