வெளியான தரம்5புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் வலயத்தில் இம்முறை 116மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர் என திருக்கோவில்; வலயக்கல்விப்பணிப்பாளர் யோகேந்திரா ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
பின்தங்கிய திருக்கோவில் வலயத்திலுள்ளஆலையடிவேம்புக்கோட் டத்தில் 76பேரும் திருக்கோவில்க்கோட்டத்தில் 33பேரும் பொத்துவில் கோட்டத்தில் 07பேரும் சித்தியடைந்துள்ளனர்.
கடந்தவருடம்(2019) மொத்தமாக(விசேடகோட்டாவுடன்) 149மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர்.2018இல் மொத்தமாக 115மாணவர்கள் சித்தியடையந்திருந்தனர். 2017இல் 104பேர் சித்திபெற்றுள்ளனர்.
1000 மாணவர்கள் தோற்றியதில் வெட்டுப்புள்ளிக்குமேல் 116பேர் சித்தியடைந்தனர். மேலும் கல்வியமைச்சின் சித்திப்புள்ளியான 70க்கு மேல் கடந்தவருடம 73வீதமாகவிருந்த சித்திகள் இவ்வருடம் 88.8வீதமாக அதிகரித்துள்ளது.
வலயத்தில் அதிகூடிய 23 சித்திகளைப் பெற்ற பாடசாலையாக ஆலையடிவேம்பு அன்னை சாரதா வித்தியாலயம் சாதனைபடைத்துள்ளது. அதேவேளை வலயத்தில் அதிகூடிய 187புள்ளிகளைப் பெற்ற மாணவன் உள்ள பாடசாலையாக ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயம் விளங்குகிறது.செல்வி தேவானந்த் கிருத்திகா என்ற மாணவி 187புளளிகளைப்பெற்று வலயமட்டசாதனை படைத்துள்ளார்.
கடந்தவருடங்களைவிட இம்முறை கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட மாணவர் ஆசிரியர் அதிபர்கள் கல்விசார் குழாத்தினர் அனைவருக்கும் பாராட்டுத்தெரிவிப்பதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.