காரைதீவில் முதலாவது கொரோனா பெண்தொற்றாளி உறுதி!

கல்முனைப்பிராந்தியத்திலுள்ள காரைதீவு சுகாதாரப்பிரிவில் முதலாவது கொரோனா பெண் தொற்றாளி நேற்று இனங்காணப்பட்டுள்ளார் என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன்  தெரிவித்தார்.
 
இவரது மகனுக்கு சிறுநீரகவருத்தமிருந்திருக்கிறது.மேலதிக சிகிச்சைக்காக  மகனும் இவரும் கடந்த 14நாட்களுக்கு முன் கொழும்புக்குச் சென்றிருக்கிறார்கள்.
 
அண்மையில் கொழும்பு சென்றுவந்த இந்த இருவருடன் அவரது குடும்பத்தினர் 10பேர் சுய தனிமைப்படுத்துதலுக்குட்படுத்தப்பட்டு நேற்றுமுன்தினம் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சிறுநீரகப்பாதிப்புக்குள்ளான மகனுக்கு தொற்றில்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
 
பெண் தொற்றாளி நேற்று(21)பகல் காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
காரைதீவுப்பிரிவில் முதல்முறையாக மாளிகைக்காடு முஸ்லிம் கிராமத்தின் மேற்கு வட்டாரத்தில் ஒருவர் தொற்று இனங்காணப்;பட்டதன்மூலம் மொத்தம் 24ஆக உயர்வடைந்துள்ளது என பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர்; வைத்தியஅதிகாரி டாக்டர் சுகுணன் உறுதிசெய்தார்.
கல்முனைப்பிராந்தியத்திலுள்ள 13 சுகாதாரவைத்தியஅதிகாரிகள் பிரிவில் இதுவரை கல்;முனை தெற்கு(5) திருக்கோவில்(1) இறக்காமம் (6)பொத்துவில்(7) அக்கரைப்பற்று (3) சாய்ந்தமருது (1) ஆகிய பிரிவுகளில் மொத்தமாக 23தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். காரைதீவுடன் இத்தொகை 24ஆக உயர்ந்துள்ளது.
 
இறுதியாக நிந்தவுரில் 10பேரும் ஆலையடிவேம்பில் 14பேரும் பொத்துவிலில் 20பேரும் அக்கரைப்பற்றில் 7பேரும் கல்முனை வடக்கில் 20பேரும் காரைதீவில் 10பேரும் சாய்ந்தமருதில் 20பேரும் பிசிஆர் பிரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
 
இவர்களில் இருவரைத்தவிர ஏனைய அனைவருக்கும் தொற்றில்லை என்று அறிக்கைகிடைத்தது. அக்கரைப்பற்றில் ஒருவரும் காரைதீவில் ஒருவருமாக இருவர் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.
 
இதன்படி கொரோனா முதல் அலையில் 2பேரும் இரண்டாவது அலையில் இதுவரை 24பேருமாக மொத்தம் 26பேர் தொற்றுக்குள்;ளாகியுள்ளனர் என டாக்டர் சுகுணன் மேலும் தெரிவித்தார்.

Related posts