மண்வாசனை’ அமைப்பின்மூலம் பாதிக்கப்பட்டமக்களுக்கு உலருணவுநிவாரணம்.

கனடா ‘மண்வாசனை’ அமைப்பின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் யுத்தத்தாலும் கொரோனாவாலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது.
 
‘மண்வாசனை’ அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதேசம் பிரதேசமாகச் சென்று இவ் உலருணவுப்பொதிகளை வழங்கிவருகிறார்.
 
முதற்கட்டமாக நாவிதன்வெளிப்பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய ஏழாம் கிராமம் தமிழ்நாடு போன்ற கிராமங்களிலுள்ள குடும்பங்களுக்கு நேற்று வழங்கிவைக்கப்பட்டன.
அச்சமயம் அப்பகுதி அதிபர் எஸ்.இராகோபால் சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் உடன்சென்று அவற்றை வழங்கிவைத்தனர்.
 
தொடர்ச்சியாக மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
 
யுத்தத்தாலும் இதரகாரணிகளாலும் மோசமாகப்பாதிக்கப்பட்ட மக்கள் சமகால கொரோனா அச்சுறுத்தலால் மிகமோசமாகப்பாதிக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்நிவாரணம் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Related posts