கல்முனை மாநகரத்தின் சிலபகுதிகள் காலவரையறைற்று முடக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளது.. பொதுப்போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. இராணுவமம் பொலிசாரும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவலில் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை பிரதான சந்தையில் எழுந்தமானமாக 200பேரில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் அன்ரிஜன் சோதனைகளில் 7பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து சுகாதாரத்துறையும் பொலிசாரும் உசாராகச்செயற்பட்டதன் விளைவாக நேற்றுமுன்தினம் இரவு முதல் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு முடக்கப்பட்டது.
பிரதான இடங்களில் இராணுவம் பொலிசார் காவல்காத்துவருகின்றனர்.அத்து டன் அன்ரிஜன் சோதனையும் இடம்பெற்றது.
நேற்றுமுன்தினம் இரவு கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான கல்முனை 11 கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பொலிசாரால் அறிவிக்கப்பட்டது.
மாநகரத்தில் 228 தொற்றுக்கள்.
இதேவேளை சுகாதாரத்துறையின் புள்ளிவிபரப்படி நேற்றுவரை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 228 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கில் 170பேரும் சாய்ந்தமருதில் 34பேரும் கல்முனை வடக்கில் 14பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனைக்குடியை மையமாகக் கொண்ட கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக 170 ஆக உயர்ந்துள்ளது.
தனியார்கள் பஸ்கள் ஏனைய வாகனங்கள் வடக்கே ஆதாரவைத்தியசாலையுடன் நிறுத்தப்பட்டன. தெற்கெ அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையருகே நிறுத்தப்பட்டன. பிரதான வீதியில் சோதனையின்பின்னர் அத்தியாவசியசேவைக்கு மாத்திரம் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.