கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 1000ஜத் தாண்டியுள்ளது. அண்மித்துள்ளது.கல்முனைப்பிராந் தியத்தில் இதுவரை 1012ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன என கல்முனை சுகாதாரப் பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
இறுதியாக கல்முனை தெற்கில் 19பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து கிழக்கின் தொற்றுக்களின் எண்ணிக்கை 1012 ஆகியது. கல்முனைப்பிராந்தியத்து ள் வருகின்ற அக்கரைப்பற்றுக் கொத்தணியில் 972பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதி பிராந்தியத்தின் ஏனைய சுகாதாரப்பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் இன்று(14) வியாழன் காலை இத் தரவுகளை வெளியிட்டுள்னார்.
பிரதேசங்களின் நிலைமை
பிராந்தியத்தில் தனியொரு பிரிவு அதிகூடிய தொற்றுக்களைக்கொண்டது என்றால் அது 310 தொற்றுக்களைக் கொண்ட அக்கரைப்பற்று எனலாம். இரண்டாவதாக கல்முனை மாநகரஎல்லைக்குள் 350தொற்றுக்கள் அதிகரித்திருக்கிறது.
கல்முனை தெற்கில் 268பேரும் சாய்ந்தமருதில் 65பேரும் கல்முனை வடக்கில் 17பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அட் டாளைச்சேனையில் 88தொற்றுக்கள்.பொத்துவிலில் அதிகரிப்பு காட்டியுள்ளது. அங்கு தொற்றுக்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது. உல்லைப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. ஆலையடிவேம் பில் 36பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.இறக்காமத் தில் 24பேரும்திருக்கோவிலில் 15பேரும் சம்மாந்துறையி;ல் 27பேரும் காரைதீவில் 46பேரும் நிந்தவூரில் 20பேரும் நாவிதன்வெளியில் 17பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். இன்னும் பெறப்பட்ட பிசிஆர் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைக்கப்பெறவில்லை. அவை வந்தால் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 88பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 66பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பிராந்தியத் திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.அட்டா ளைச்சேனையில் 155பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.. நுரைச்சோலை நிலையம் தயாராகிவருகிறது. இதுவரை கல்முனைப்பிராந்தியத்தில் ஆறு கொரோனா இறப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை இப்பிராந்தியத்தில் 23685பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிசிஆர் சோதனை 12674பேருக்கும் அன்ரிஜன் சோதனை 11011பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.