அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.
நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம், விவேகானந்தா மகா வித்தியாலயம் மற்றும் கலைமகள் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான விஞ்ஞான மற்றும் கணித பாடங்களுக்கான இலவச கருத்தரங்குகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியம் நாவிதன்வெளி பிரதேசத்தில் கல்வி மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற அமைப்பாகும். அந்தவகையில் இந்த இலவச கருத்தரங்கினையும் தற்கால சூழலுக்கேற்ற வகையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒன்றியத்தின் தலைவர் கே.விஜய் தலைமையில் ஒன்றிய உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் சமூக நலன்விரும்பிகளான திரு.தயானந்தன் திரு.ஜெயக்குமார் ஆகியோரின் நிதிப் பங்களிப்புடனும் நடைப்பெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு மூன்று பாடசாலைகளிலும் அதிபர்கள் ஒத்துழைப்பை வழங்கி மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்தியிருந்தனர் அந்தவகையில் சனிக்கிழமை 68 மாணவர்களும் ஞாயிற்றுக்கிழமை 73 மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர். விஞ்ஞான மற்றும் கணித பாடங்களில் பரீட்சை புள்ளிகளின் அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் நுணுக்கமான செய்கை முறைகள் பற்றியும் மாதிரி வினாத்தாள் ஊடாக ஆசிரியர்கள் தெளிவூட்டினர். மேலும் வரலாறு, ஆங்கிலம், தமிழ் போன்ற பாடங்களுக்கும் விரைவில் இலவச கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதாக அமைப்பின் தலைவர் உறுதியளித்தார்.
கே.கிலசன்